உள்ளடக்கத்துக்குச் செல்

மேல உளூர் நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல உளூர் சிவசாமி நடராஜன் (எஸ். நடராஜன்) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிவசாமி குமரண்டார், தாயார் மங்களம் ஆவார். இவர் தாய் மாமன் பழனியாண்டி கடம்புரார் ஆதரவில் வளர்ந்தார்.[1]

இந்திய விடுதலைப் போராட்டம்

[தொகு]

1947ம் ஆண்டு, காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து, உப்பு சத்யாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றார்.

ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் துவங்கிய யாத்திரையில், இவரும் போராட்டத்தில் பங்கேற்றார். டெல்லி சலோ போராட்டத்தில் பங்கேற்றபோது, சென்னை பூக்கடையில் கைது செய்யப்பட்டு, அந்தமான் சிறையிலும், ஆலிப்பூரா சிறையிலும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். மேல உளூர் கிராமத்தில் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றியதற்காக தடியடிக்கு ஆளானார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1960ம் ஆண்டு, மேல உளூர் கிராமத்தில் காமராஜர் பெயரால் காலனியை நிறுவினர். 1960 மே, 21ல் எளிமையான காலனி திறப்பு நிகழ்ச்சியில் காமராஜர் பங்கேற்றார்.

இவர் 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தஞ்சை முதுபெரும் தியாகிக்கு எளிமையான முறையில் இறுதி அஞ்சலி". தினமலர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல_உளூர்_நடராஜன்&oldid=3390119" இலிருந்து மீள்விக்கப்பட்டது