விக்கிப்பீடியா பேச்சு:இந்த வாரக் கூட்டு முயற்சி/பரிந்துரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியன், வரும் வாரத் தலைப்புகளில் நாய், மனிதர் ஆகியவற்றை அறிவித்துள்ளீர்கள். நல்ல தலைப்புகள் தாம். ஆனால், இவற்றுக்கான பரிந்துரைகளைக் காண இயலவில்லையே? இவை நீங்கள் விரும்பும் தலைப்புகள் என்றால் முதலில் இவற்றைக் கூடுதல் பரிந்துரைகள் பகுதியில் சேர்க்கலாம். இதன் மூலம் இவற்றில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்க முடியும். அல்லது, கூட்டு முயற்சியாக அறிவிக்கும் முன்னரே ஆர்வமுடைய பயனர்கள் முன்னேற்றி விடுவார்கள். ஒரே பயனர் அல்லது கூட்டு முயற்சித் திட்டத்தைப் பொறுப்பெடுத்துச் செய்பவரின் விருப்பத் தலைப்புகள் மட்டும் கூடுதலாக இடம்பெறாது அனைவரும் பரிந்துரைகளைத் தரத் தூண்டுதலாக இருக்கும். ஒரு பயனர் புதிதாக தனது முதல் பரிந்துரையைத் தரும் போது, அது நல்ல பரிந்துரையாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக வரும் வாரத்தில் அதனைக் கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவிப்பது அவருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். போதுமான பரிந்துரைகள் இல்லாத நிலையில், குறிப்பிட்ட வாரம் வரை காத்திருந்து வேறு புதிய நல்ல பரிந்துரைகள் இல்லா நிலையில் கூட்டு முயற்சிகளைத் தேர்ந்தெடுப்பது நன்று. இதன் மூலம், மாற்றுக் கருத்து இல்லாத அனைத்துப் பரிந்துரைகளும் கூட்டு முயற்சித் தலைப்பாக அறிவிக்கப்பட வாய்ப்பாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 17:35, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

ok--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:40, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

நேற்று நேரமில்லை என்பதால் முழுதாக பதிலளிக்கவில்லை. நான் அக்கட்டுரைகளை எடுத்தது விருப்பத்தின் பேரில் அல்ல. அந்த 3 கட்டுரைகளும் மிகவும் சிறியதாகவும் ஆனால் எளிதாக விரிவாக்கக் கூடியதாகவும் இருந்தது. அதனால் அப்படிச் செய்தேன். இனி நீங்கள் கூறிய வாறு செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:10, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு நன்றி, சுப்பிரமணியன். இந்தத் தலைப்புகள் உங்கள் வழக்கமான ஆர்வத் துறைகளில் வருவன அல்ல என்று அறிவேன். நான் சொல்ல வந்தது சிறிய கட்டுரை ஒன்றே முன்னேற்றலாமே என்று நீங்கள் கருதும் தலைப்பைக் கூட முதலில் பரிந்துரையில் இட்டு ஓரிரு வாரம் பொறுத்து அறிவிக்கலாம் என்பதே. பல முக்கியமான தலைப்புகளை கூட்டு முயற்சியாக அறிவிக்கும் முன்னரே ஆர்வமுடைய பயனர்கள் முன்னேற்றி விடுவதைக் கண்டிருக்கிறோம். நன்றி--இரவி (பேச்சு) 06:13, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆம். நீங்கள் கூறுவது வேட்டியில் நடந்தது. இனி அபப்டியே செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:28, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

பரிந்துரைகளுக்கு முன்னுரிமை தர வேண்டுகோள்[தொகு]

அண்மைய சில கூட்டு முயற்சித் தலைப்புகளைப் பரிந்துரைகளில் காண இயலவில்லையே? நிறைய பரிந்துரைகள் தேங்கி உள்ளன. அறிவிக்கப்பட்ட சில தலைப்புகளில் எனக்கு மாற்றுக் கருத்தும் உள்ளது. இது போன்ற மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாலேயே முன்கூட்டியே பரிந்துரைகளை இட்டுத் தலைப்புகளை அறிவிக்கும் முறையை உருவாக்கினோம். இதனைப் பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:05, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. பரிந்துரையில் உள்ளவை அனைத்தும் விரிந்துள்ள கட்டுரைகளே. இரும்பைத் தவிர்த்து, 12ஆம் தேதி தானே இட்டார். மேலும் காட்சிப்படுத்தியது எல்லாம் ஒன்றள்ளது இரண்டு பத்திகள் தான் இருக்கும். அதனால் தான் அதை எளிதில் விரிவாக்கலாம் என்று முன்னே விடுவது. ஞாயிறன்ரு சில கட்டுரைகளை தேடிப்பார்ப்பேன் அதில் ஏதாவது குறுங்கட்டுரையாக இருந்தால் உடனெ எடுத்துப் போட்டுவிடுவது தான். ஏற்கனவே விரிந்த கட்டுரையில் முக்கியமான் த்கவல்கள் எல்லாம் ஏற்கனவே இருக்குமே. அதனால எளிதில் விரிவாக முடியுமா?

அப்படியே இங்கும், வரவும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:12, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சுப்பிரமணியன், ஒரு சிலரின் பரிந்துரைகள் மட்டுமே தொடர்ந்து இடம்பெறக்கூடாது என்பதால் தான் ஒன்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகள் கூடுதல் பரிந்துரையாக இடப்படுகிறது. மற்ற பொருத்தமான பரிந்துரைகள் இல்லா நிலையில், கூடுதல் பரிந்துரைகளில் இருந்தும் தலைப்புகளை அறிவிக்கலாமே? ஞாயின்று தேடிப் பிடிக்கும் குறுங்கட்டுரைகளை முதலில் பரிந்துரை / கூடுதல் பரிந்துரையில் இட்டு விட்டால் அடுத்தடுத்த வாரங்களில் அறிவிக்கலாம் அல்லவா? இந்தத் திட்டத்துக்கு என்று ஒரு குறைந்தபட்ச நடைமுறையைப் பின்பற்றுவோமே என்பதே எதிர்பார்ப்பு. நன்றி--இரவி (பேச்சு) 14:27, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]