விக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்பொழுது முனைப்புடன் இயங்கும் அனைத்து பங்களிப்பாளர்களின் பரிந்துரைகளும் வாக்கெடுப்புக்கு அவசியமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். அவரவர் கல்வித் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து பங்களிப்பாளர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க உகந்த கட்டுரைத் தலைப்புகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நீங்கள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கு அடுத்து உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.

பரிந்துரைகள்[தொகு]

இங்கு பரிந்துரையை இடவும்

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:37, 18 பெப்ரவரி 2013 (UTC)

--குறும்பன் (பேச்சு) 17:25, 21 பெப்ரவரி 2013 (UTC)


மாற்றுக் கருத்துள்ள பயனர் பரிந்துரைகள்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை ஒப்பிடும்போது இக்கட்டுரை ஏற்கனவே ஓரளவு வளர்ந்துள்ளது. தவிர, மிகவும் துறை சார்ந்த கட்டுரையாக இருப்பதால் பரவலான பங்களிப்பு இருக்குமா என்று ஐயமாக உள்ளது. ஏற்கனவே, இதே போன்று பரிந்துரைத்த சங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரைக்குப் போதுமான பங்களிப்புகளைப் பெற இயலவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அருள்கூர்ந்து பொதுவான, மிகவும் அடிப்படையான, அனைவரும் பங்களிக்கக்கூடிய தலைப்புகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 10:42, 1 மார்ச் 2012 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை ஒப்பிடும் போது, கட்டுரை ஏற்கனவே வளர்ந்த நிலையில் உள்ளதே... மேற்கொண்டு விரிவாக்கும் வாய்ப்பு, இலகுவான உசாத்துணைகள் உண்டா?--இரவி (பேச்சு) 11:28, 25 மார்ச் 2012 (UTC)

  • தொமஸ் அல்வா எடிசன் - இந்த மாபெரும் கண்டுபிடிப்பாளரின் வரலாற்றை விரித்து எழுதுவது, பல அறிவியல்கட்டுரைகளைத் தொடங்க வழி வகுக்கும்--இரவி (பேச்சு) 10:42, 1 மார்ச் 2012 (UTC)
இக்கட்டுரையை ஓரளவு விரிவாக்கியுள்ளேன். யாராவது ஒருவர் சரிபார்ப்பின் நன்று.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:00, 5 ஏப்ரல் 2012 (UTC)
கட்டுரையை விரிவாக்கியதற்கு நன்றி, பார்வதி. இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்--இரவி (பேச்சு) 03:06, 20 ஏப்ரல் 2012 (UTC)

  • 2012 பிரிக்ஸ் மாநாடு - ஒரு வாரத்தில் இரண்டு, மூன்று கட்டுரைகளையும் கூட்டுமுயற்சியில் முயற்சிக்கலாம். தேவைப்பட்டால் சென்றவார தலைப்புகளை பங்களிப்பைப் பொறுத்து காலத்தை நீட்டிக்கலாம் என்பது எனது கருத்து. நன்றி -- மாகிர் (பேச்சு) 14:26, 5 ஏப்ரல் 2012 (UTC)

கூட்டு முயற்சியாக இதனை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துச் சற்றுத் தயக்கமாக உள்ளது. இது போல் நிறைய மாநாடுகள் நடக்கின்றனவே? மிகவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 03:06, 20 ஏப்ரல் 2012 (UTC)


கூட்டு முயற்சியாக அறிவிக்கும் முன்னரே பல பயனர்கள் சேர்ந்து இக்கட்டுரையை மேம்படுத்தியுள்ளனர் :) --இரவி (பேச்சு) 06:14, 25 மே 2012 (UTC)[பதிலளி]


இதை விரிவாக்க ஆப்டிக்கல் சயின்சு பற்றி அறிய வேண்டும் அல்லவா. இதை அனைவரும் மேம்படுத்த ஏதேனும் வழியிருந்தால் கூறவும். நீங்கள் முன்பு பரிந்துரைத்த கொழும்பு கட்டுரை அதிக நபர்களின் பங்களிப்பை பெற்றது. அதைப்போல் பரிந்துரை இருந்தால் மேலும் தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:15, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

மூக்கு கண்ணாடி பற்றி எழுத optical science தெரிந்திருக்க தேவையில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. மூக்குக் கண்ணாடி என்பது தற்போது அதிக நபர்களால் பயன்படுத்தப்படுகிறது. யோசித்தே பரிந்துரை செய்தேன், முடிந்த அளவிலான தகவல்களை திரட்டலாம். தமிழில் அதிகப்படியான வார்த்தைகள் கிடைக்காதாதால் என்னால் மொழி பெயர்க்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் பொது நானும் முடிந்த அளவு பங்களிப்பு செய்கிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:59, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை மேம்படுத்த துறை சார் அறிவு தேவைப்படாது என்றே நினைக்கிறேன். ஆனால், இதைக் காட்டிலும் முக்கியத்துவமும் ஆர்வமும் இருக்கக்கூடிய தலைப்புகளைப் பரிந்துரைக்கலாமே? நன்றி--இரவி (பேச்சு) 08:10, 16 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:22, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]


நிறைவேறிய பரிந்துரைகள்[தொகு]

  1. தமிழ்நாடு- en:Tamil Nadu ஆங்கிலக்கட்டுரையில் உள்ள அளவு கூட தமிழ்நாட்டைப்பற்றி தமிழ்க் கட்டுரையில் இல்லை. எனவே விரிவாக்கினால் நல்லது. (ஏற்கனவே சிறப்பு மற்றும் முதல் பக்கக் கட்டுரையாக உள்ளது.)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:23, 29 மார்ச் 2012 (UTC)
  2. மீன் பிடித்தல் - முக்கியத்தொழில்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:28, 26 மார்ச் 2012 (UTC)
  3. அணுக்கரு ஆற்றல் - கூடன்குள் அணுமின் உலை பிரச்சினை தொடர்பாக தற்கால முக்கியத்துவம் உள்ள கட்டுரை--இரவி (பேச்சு) 10:42, 1 மார்ச் 2012 (UTC)
  4. ராம் பிரசாத் பிசுமில் - மொழி பெயர்க்க நிறைய உள்ளது. ககோரி ரயி கொள்ளை, சாண்டர்சு படுகொலை போன்ற துணைக்கட்டுரைகள் வளர வழிவகுக்கும். மேலும் அதில் சம்பந்தப்பட்ட இந்தியப்புரட்சியாளர்கள் கட்டுரைகளும் புதிதாக சேர்க்கப்படலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:28, 26 மார்ச் 2012 (UTC)
  5. சூழல் மாசடைதல் - தமிழ் நிலங்களும் உலகமும் எதிர்கொள்ளும் பெரும் சிக்கல். --இரவி (பேச்சு) 11:27, 2 ஏப்ரல் 2012 (UTC)
  6. காவிரி நதி நீர் பிரச்சனை - மாகிர் (பேச்சு) 14:26, 5 ஏப்ரல் 2012 (UTC)
  7. இந்திய விண்வெளி ஆய்வு மையம் - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களில் ஒன்றான இஃச்ரோ குறித்து விரிவாக இருப்பது மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 14:08, 29 ஏப்ரல் 2012 (UTC)
  8. குதிரை - மாந்த நாகரிக வரலாற்றில் தவிர்க்க இயலாத விலங்கு. இக்குறுங்கட்டுரையை விரிவாக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 10:42, 1 மார்ச் 2012 (UTC)
  9. ஜவகர்லால் நேரு - முதல் இந்தியப் பிரதமர் --ஸ்ரீதர் (பேச்சு) 13:30, 24 மே 2012 (UTC)[பதிலளி]
  10. ஒளி - இயற்பியலின் அடிப்படை தலைப்பு. ஒளியியல் சம்பந்தமான கட்டுரைகளிற்கு முன்னோடியாக அமையும் --Sank (பேச்சு) 10:25, 26 மே 2012 (UTC)[பதிலளி]
  11. மலேசியா - தமிழர் அதிகம் வாழும் நாடு என்பதால் இதை விரிவாக்கவேண்டியது அவசியம் --Prash (பேச்சு) 12:49, 30 மே 2012 (UTC)[பதிலளி]
  12. விக்கிப்பீடியா:தொகுத்தல்
  13. கொழும்பு - இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இக்கட்டுரையை விரிவாக்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:27, 25 மே 2012 (UTC)[பதிலளி]
  14. சுபாஷ் சந்திர போஸ் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:31, 29 மே 2012 (UTC)[பதிலளி]
  15. நாய் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:24, 11 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்--இரவி (பேச்சு) 06:32, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
  16. மனிதர் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:24, 11 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்--இரவி (பேச்சு) 06:32, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
  17. ஆபிரகாம் லிங்கன் - பத்தொன்பதாம் நூற்றாண்டின், அமெரிக்காவின் முக்கியமான ஆளுமை--இரவி (பேச்சு) 10:42, 1 மார்ச் 2012 (UTC)
  18. உலகப் பாரம்பரியக் களம் - -- உழவன் +உரை.. 07:03, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
  19. சிங்கப்பூர் - தமிழர்கள் அதிகம் வாழும் நாடு. தமிழும் ஆட்சி மொழியாக உள்ள நாடு --குறும்பன்
  20. திருச்சிராப்பள்ளி - தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கோவை, மதுரையை அடுத்து பெரியதுமான திருச்சிராப்பள்ளி நகரம் குறித்த கட்டுரையை விரிவுபடுத்தலாம். --மணியன் (பேச்சு) 14:08, 10 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--இரவி (பேச்சு) 19:10, 10 சூலை 2012 (UTC)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:16, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
  21. குரங்கு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:32, 13 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
  22. இரும்பு- மிக முக்கியமானதொரு தனிமம்--சங்கீர்த்தன் (பேச்சு) 10:06, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  23. நிலா புவியின் துணைக்கோள்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:28, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  24. ஆலிவ் எண்ணெய் - தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:38, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
  25. இங்கிலாந்து
  26. அட்லசு (வரைபடம்) - முக்கியமான கட்டுரை--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:26, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  27. அம்பேத்கர் - இரவி
  28. இந்தோனேசியா -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:37, 18 பெப்ரவரி 2013 (UTC)
  29. புதுச்சேரி ---குறும்பன் (பேச்சு) 17:25, 21 பெப்ரவரி 2013 (UTC)
  30. இயற்பியல் - அடிப்படைத் தலைப்பு.--இரவி (பேச்சு)
  31. மதியிறுக்கம் - விழிப்புணர்வு வேண்டிய தலைப்பு--இரவி (பேச்சு)
  32. சிவன்:சைவர்களின் முழுமுதற்கடவுள். அத்துடன் சிறிய உள்ளடக்கத்தையே கொண்டுள்ளது.ஆங்கில விக்கிபீடியாவின் பத்தில் ஒருபங்கு போலவே இருக்கிறது. அனேகமாக அதிகமானோர் அறிந்திருப்பர்.மேம்படுத்துவது சிறந்ததென கருதுகிறேன். கூட்டுமுயற்சி ஆக்கினால் அனைவரது பங்களிப்பும் கிடைக்குமென நம்புகிறேன். அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.நன்றி.--aathavan jaffna (பேச்சு) 09:59, 9 ஏப்ரல் 2013 (UTC)
  33. சூரிய மின்னாற்றல் (ஒரு மாதம் முழுக்க கூகுள் கட்டுரைகளைச் சீராக்கலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில்)
  34. குருதி அழுத்தம் (ஒரு மாதம் முழுக்க கூகுள் கட்டுரைகளைச் சீராக்கலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில்)
  35. ஓசோன் குறைபாடு (ஒரு மாதம் முழுக்க கூகுள் கட்டுரைகளைச் சீராக்கலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில்)
  36. காட்டுயிர் (ஒரு மாதம் முழுக்க கூகுள் கட்டுரைகளைச் சீராக்கலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில்)
  37. இலங்கை - புதிய தகவல்கள் சேர்க்கப்படலாம். மேலும் ஏராளமான சிவப்பு இணைப்புகள் உள்ளதால் புதிய கட்டுரைகளும் வளரும்.--பிரஷாந் (பேச்சு) 06:09, 12 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:42, 22 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
  38. ஈழப் போர் - அனேகரால் பார்க்கப்படும் கட்டுரை மிகச் சிறிதளவு உள்ளடக்கத்தையே னொண்டுள்ளது. --Anton (பேச்சு) 02:23, 14 ஏப்ரல் 2013 (UTC)
  39. யாழ்ப்பாணம் - இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம். தமிழர் மட்டும் வாழும் இடம் ஆனால் தமிழ் விக்கிபீடியாவில் சிறப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.இதை கூட்டுமுயற்சியில் வழங்கினால் அதிக சிறப்பு தகவல்களையும் படங்களையும் இணைக்க முடியும்.கூட்டுமுயட்சியாக்க விரும்புகிறேன்.--Aathavan jaffna (பேச்சு) 09:21, 3 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன், நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும், இப்போதுள்ள யாழ்ப்பாணம் கட்டுரை ஒரு பக்கவழிக் கட்டுரையாகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் இருக்கும் உள்ளிணைப்புகளில் உள்ள கட்டுரைகளை விருப்பமானவாறு மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:42, 3 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன், மிக நல்ல பரிந்துரை. இவ்வார கூட்டு முயற்சியாக அறிவித்த பின்னரே இவ்வுரையாடலைக் கண்டேன். எனவே, குறிப்பிட்ட வழிமாற்றுப் பக்கத்தில் உள்ள எந்தக் கட்டுரையை கூட்டு முயற்சியாக அறிவிப்பது என்று பரிந்துரைத்தீர்கள் என்றால் அதனை அடுத்த வார கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 04:34, 4 ஏப்ரல் 2013 (UTC)
மன்னிக்கவும், இரவி,நீங்கள் குறிப்பிட்ட வழிமாற்று பக்கம் என்பது சற்று விளங்கவில்லை. --Aathavan jaffna (பேச்சு) 06:20, 4 ஏப்ரல் 2013 (UTC)
இரவி, யாழ்பாணம் கட்டுரையில் உள்ள யாழ்பாண கோட்டை,யாழ்பாண நகரங்கள் போன்ற சிலவற்றை யாழ்ப்பாணக் கட்டுரையின் பகுதிகளாக(உள்ளடக்கதிட்குள்) மாற்றலாமே, நான் நினைக்கிறேன் இப்படிச்செய்தால் இது ஒரு முழுமை பெற்ற கட்டுரையாக அமையுமென்று. --Aathavan jaffna (பேச்சு) 06:28, 4 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன், தற்போதுள்ள யாழ்ப்பாணம் கட்டுரையைப் பாருங்கள். இது யாழ்ப்பாணம் பற்றி விக்கியில் உள்ள ஏனைய கட்டுரைகளின் பட்டியல் (பக்கவழிமாற்று) மட்டுமே. யாழ்ப்பாணம் பக்கவழியில் தற்போதுள்ள கட்டுரைப் பகுதிகளையும் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இதன் முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாணம் (நகரம்). இக்கட்டுரையைக் கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளைத் தனித்தனியே மேம்படுத்த வேண்டும். யாழ்ப்பாணம் (நகரம்) கட்டுரையில் இவற்றைப் பற்றிச் சுருக்கமாகத் தரலாம். இது குறித்து விரிவான உரையாடலை யாழ்ப்பாணம் கட்டுரையின் உரையாடல் பகுதியில் தொடர்ந்தால் பொருத்தமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 06:35, 4 ஏப்ரல் 2013 (UTC)
பார்க்க: பேச்சு:யாழ்ப்பாணம்.--Kanags \உரையாடுக 07:07, 4 ஏப்ரல் 2013 (UTC)
  1. மாதம் ஒரு கூகுள் கட்டுரையைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். வேறு என்னென்ன வழிகளில் எல்லாம் இவற்றை மேம்படுத்தலாம் என்று தனியாக அறை எடுத்துத் தான் சிந்திக்க வேண்டும் போல :( --இரவி (பேச்சு) 05:41, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]
இதுவும் நல்ல யோசனை தான் . 👍 விருப்பம் --Aathavan jaffna (பேச்சு) 09:29, 3 ஏப்ரல் 2013 (UTC)
ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான ஒரு கூகுள் கட்டுரையைத் தேர்ந்தெடுத்து சிறிது சிறிதாக மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:38, 10 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம் ஒரு மாதம் முழுவதும் கூகுள் கட்டுரை புத்துணர்வு மாதமாகத் தேர்ந்தெடுத்து கூகுள் கட்டுரைகளில் அவரவர்களுக்கு விருப்பமான கட்டுரையைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்தலாம். மே மாதம் முழுவதும் இதனைக் கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:36, 10 ஏப்ரல் 2013 (UTC)
யானைகளுக்கான கோடைக்கால புத்துணர்வு முகாம் போல் நல்ல யோசனை :) ஆனால், எனது அனுபவத்தில் தெளிவான ஒற்றை இலக்கு தரும்போதே கூடுதல் பங்களிப்புகள் வருவதைக் கண்டிருக்கிறேன். எனவே, நீங்களே நல்லதாக நான்கு கூகுள் கட்டுரைகளைப் பரிந்துரையுங்கள். மாதம் முழுவதும் மேம்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 13:49, 10 ஏப்ரல் 2013 (UTC)