குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறைபாடு (Deficiency) என்பது பற்றாக்குறை அல்லது செயல்பாடு குறைவு காரணத்தால் வழக்கமான அல்லது அவசியமாகத் தேவைப்படும் அளவைக் காட்டிலும் ஓர் உடற்கூறு குறைவாகச் செயல்படும் நிலையைக் குறிக்கும்.[1]

ஊட்டச்சத்துகள்[தொகு]

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டால் ஊட்டச்சத்து குறைபாடு நோய் தோன்றி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, வைட்டமின் ஏ எனப்படும் உயிர்ச்சத்து குறைபாடு காரணமாக கண்களில் சிராப்தால்மியா எனப்படும் விழிவெண்படல வறட்சி நோயும், மாலைக்கண் நோயும் ஏற்படுகின்றன.

அகந்தோன்று புரதங்கள்[தொகு]

நொதிகள் போன்ற உள்ளார்ந்த உற்பத்தி புரதங்களின் குறைபாடு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து வகையான மரபணு கோளாறுகளும் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக வளர்சிதை மாற்றத்தின் உள்ளார்ந்த பிழைகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. TheFreeDictionary > deficiency. Citing:
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைபாடு&oldid=3417701" இலிருந்து மீள்விக்கப்பட்டது