பாருனி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாருனி மலை
புவியியல்
அமைவிடம்மேற்கு இம்பால் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்

பாருனி மலை (Baruni Hill ) நோங்மைச்சிங் மலை அல்லது செல்லோய் லாங்மாய் மலை அல்லது ஞாயிறு மலை என்றும் அழைக்கப்படும் இது மணிப்பூரின் இமயமலையில் உள்ள ஒரு மலைத்தொடராகும். மேதி புராணங்களின்படி லைனிங்தோ நோங்போக் நிங்தோ என்ற தெய்வமும், அவரது மனைவி பாந்தோய்பியும் தங்குமிடமாகும். இந்த மலை முழு வடகிழக்கு இந்தியாவிலும் சனமாகி நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான யாத்திரைத் தளங்களில் ஒன்றாகும். மலை நடைபயணம் ,மலையேற்றம் உள்ளிட்ட சாகச நடவடிக்கைகளுக்கு இந்த மலை மிகவும் பிரபலமானது. [1] [2] [3]

புராண நம்பிக்கை[தொகு]

இந்த மலை, மணிப்பூரி புராணங்களில் இலெய்னிங்தோ நோங்போக் நிங்தோவும் அவரது மனைவியான பாந்தோய்பியும் தங்குமிடம் என்று நம்பப்படுகிறது. பிற்காலத்தில், மணிப்பூர் இராச்சியத்தில் இந்து மதத்தின் வருகையுடன், லெய்னிங்தோ நோங்போக் நிங்தோவின் பண்புகளை இந்து மதத்தின் சிவன் என்று அடையாளம் காணப்பட்டது. [4]

புனிதத் தளங்கள்[தொகு]

மலையடிவாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான புனிதத் தளங்களில், இலெய்னிங்தோ சனமாகியும், அவரது தாயார் இலெயமரெல் சிதாபி ஆகியோரின் தங்குமிடமான சனமாகி கியோங் கோயில் அதிகம் பார்வையிடப்பட்ட ஒன்றாகும். இந்த கோயில் கபூய், தாங்க்குல், கோம், அமர், சோத்தே, செலியாங்ராங், மேதி, பிஷ்ணுப்ரியா மணிப்பூரி மக்கள் மற்றும் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் சனமாகி நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களின் புனித யாத்திரைத் தளமாகும். [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாருனி_மலை&oldid=3035482" இலிருந்து மீள்விக்கப்பட்டது