சகா ராமராவ்
சகா ராம ராவ் (Sakha Rama Rao) ( சாகரம் ராவ் ) இவர் ஓர் இந்திய இசைக்கலைஞரும், தென்னிந்திய சித்ரவ்வீணையை ( "கோட்டுவாதியம்") கச்சேரிகளுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இருப்பினும், இவரது தந்தை சீனிவாச ராவ் தான் நவீன காலங்களில் சித்ரவீணையின் மறுபிறவிக்கு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். இவர் தம்புரா மூலம் பரிசோதனை செய்யத் தொடங்கினார். குழந்தை பருவத்திலிருந்தே இவருக்கு இந்த கருவியின் மேல் ஈடுபாடிருந்தது.
உயர்தர இசையை உருவாக்குவதற்கான அதன் மகத்தான திறனை இவரால் உணர முடிந்தது. இந்த கருவியை அதன் வழக்கமான ஏழு சரங்களைக் கொண்ட ஒரு துணிச்சலான வீணையாக இவர் மீண்டும் வடிவமைத்தார். இவர் இந்த கருவியில் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு அவ்வப்போது நிகழ்ச்சிகளை வழங்கினார். கருவியின் வரலாறு அவருக்குத் தெரியாததால், அதற்கு கோட்டுவாத்தியம் என்ற ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரவிகிரண், போன்ற சில அறிஞர்களுடன் சேர்ந்து, கருவியின் தோற்றம் பற்றி ஆய்வு செய்து, இறுதியில் சித்ரவ்வீணை என்ற பாரம்பரிய பெயரை மீட்டெடுத்தார்.
சகா ராம ராவ் ஒரு "இசைக்கலைஞர்களின் இசைக்கலைஞர்" மற்றும் கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார் மற்றும் செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற பல சிறந்த கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். விரைவில் சித்ரவீணை நிகழ்ச்சியைத் தொடங்கிய பலர் வரத்தொடங்கினர். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "The Hindu : Friday Review Chennai / Columns : Fretless strings, vibrant music sound". Chennai, India: www.thehindu.com. 2008-03-14 இம் மூலத்தில் இருந்து 2008-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080318132141/http://www.hindu.com/fr/2008/03/14/stories/2008031451330500.htm. பார்த்த நாள்: 2008-05-20.