அயூப் பச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயூப் பச்சு ( Bengali pronunciation:   ; 16 ஆகஸ்ட் 1962 – 18 அக்டோபர் 2018) வங்காளதேச ராக் இசை கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர், பாடலாசிரியர் ஆவார், இவர் வங்களாதேச ராக் இசைக்குழுவின் நிறுவனர் ஆவார்.[1] இவர் முன்னணி பாடகராகவும், இசைக்குழுவின் முன்னணி கிதார் கலைஞராகவும் இருந்ததன் மூலம் பரவலான புகழ் பெற்றார்.

பாட்டியாவில் பிறந்த பச்சு 1970 களின் முற்பகுதியில் தனது குடும்பத்துடன் சிட்டகாங்கிற்கு குடிபெயர்ந்தார். இவர் 1977 ஆம் ஆண்டில் தனது முதல் இசைக்குழுவான அக்லி பாய்ஸ் என்பதனை உருவாக்கினார். இவர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற போது கிதார் கலைஞராக ராக் இசைக்குழு ஃபீலிங்ஸ் (இப்போது நகர் பால் என்று அழைக்கப்படுகிறது) எனும் குழுவில் சேர்ந்தார். அவர் 1977 முதல் 1980 வரை அந்த இசைக்குழுவில் இருந்தார். 1980 ஆம் ஆண்டில், அவர் சோல்ஸ் எனும் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் பத்து ஆண்டுகள் இருந்தார்.மேலும் சூப்பர் சோல்ஸ் (1982), கல்லூரி எர் காரிடோர் (1985), மனுஷ் மதிர் கச்சகாச்சி (1987) மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு (1988) உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் பாடல்களில் இவர் தோன்றினார். 1991 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த இசைக்குழுவான எல்.ஆர்.பி. மூலம் இவர் தனது இரண்டு பாடல் தொகுதிகளை வெளியிட்டார். மேலும் தனிநபராக பாடல்களை பாடியதன் மூலமும் இவர் பரவலாக வெற்றியினைப் பெற்றார்.அவரது முதல் தனி பாடலான ரோக்டோ கோலாப் செப்டம்பர் 1986 இல் வெளியிடப்பட்டது. மேலும் இவர் 1988 ஆம் ஆண்டில் வெளியிட்ட மோய்னா மற்றும் 1995 ஆம் ஆண்டுகலில் வெளியிட்ட கோஷ்தோ ஆகிய படைப்புகளும் இவருக்கு வெற்றியினைப் பெற்றுத் தந்தது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பச்சு 1962 ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிட்டகாங், பாட்டியாவில் உள்ள கொர்னா யூனியனில் முகமது இஷாக் சவுத்ரி மற்றும் நூர்ஜஹான் பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2] வங்காளதேசத்தின் விடுதலைப் போருக்குப் பிறகு இவரின் குடும்பம் சிட்டகாங் நகரத்திற்கு குடிபெயர்ந்தது. அவர்கள் ஜூபிலி சாலையில் வசித்து வந்தனர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.இவர் அவர்களில் மூத்தவர் ஆவார். இவரது புனைபெயர் ராபின் ஆகும். இவர் நான்காம் வகுப்பில் இருந்தபோது, 1973 ஆம் ஆண்டு ஒலி கிதாரினை தனது தந்தையிடம் இருந்து பரிசாகப் பெற்றார். சிட்டகாங்கில் வசித்து வந்த ஜேர்மப் தயாஸ் ஒரு மியான்மர் நபரிடமிருந்து கிதார் வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் முதலில் தனது நண்பரிடமிருந்து ஒரு மின்சார கிதாரை கடனாக வாங்கினார், இது டீஸ்கோ கிதார் ஆகும் . இவர் அதில் அதிக ஆர்வம் காட்டியதனால் அதை இவரிடமே அவரது நண்பர் கொடுத்து விட்டார். ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் ஜோ சத்ரியானி ஆகியோரின் கிதார் வாசிக்கும் நுட்பங்களினால் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் 1975 இல் அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 1979 ஆம் ஆண்டில் இவர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3] இசைக்கலைஞர் ஆவதற்கு அவரது பெற்றோர் முதலில் அவரை ஆதரிக்கவில்லை. ஆனால், ராக் இசை மீதான இவரது ஆர்வத்தை அவரது குடும்பத்தினர் புரிந்து கொண்ட பிறகு, இவரை ஒரு இசைக்கலைஞராக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, பச்சு கோல்டன் பாய்ஸ் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை உருவாக்கினார், பின்னர் இது அக்லி பாய்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. குமார் பிஷ்வாஜித் இசைக்குழுவில் முன்னணி பாடகராகவும், கிதார் கலைஞராகவும் இருந்தார். அவர்கள் திருமணங்களில் விடுதிகளில் நிகழ்ச்சிகளைச் செய்தார்கள் (பெரும்பாலும் பாட்டியா உபசில்லாவில்).

Silver Guitar for Ayub Bachchu in Chattogram

சான்றுகள்[தொகு]

  1. Saimum Saad (2019-04-16). "Ayub Bachchu sole owner of LRB, only heirs can run it: Copyright Office". https://bdnews24.com/entertainment/2019/04/16/ayub-bachchu-sole-owner-of-lrb-only-heirs-can-run-it-copyright-office. பார்த்த நாள்: 18 April 2019. 
  2. "Ayub Bachchu - Celebrities of Bangladesh" இம் மூலத்தில் இருந்து 2019-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190110172942/http://www.mediabangladesh.net/bcard/ayub-bachchu/. 
  3. Ul Ibad (9 August 2018). "I always had one goal, and that was to become a musician, I had no other option". Dhaka Tribune. https://www.dhakatribune.com/bangladesh/2018/10/18/i-always-had-one-goal-and-that-was-to-become-a-musician-i-had-no-other-option-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயூப்_பச்சு&oldid=3592658" இலிருந்து மீள்விக்கப்பட்டது