அனமுல் ஹக்
முகமது அனமுல் ஹக் பிஜோய் (Mohammad Anamul Haque Bijoy பிறப்பு: டிசம்பர் 16, 1992) பொதுவாக அனமுல் ஹக் என அறியப்படும் இவர் ஒரு வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். வலதுகை மட்டையாளர் ஆன இவர் வங்காளதேச தேசிய துடுப்பாட்ட அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவரது சொந்த ஊர் குஷ்டியா. ஆறாம் வகுப்பு வரை குஷ்டியா ஜில்லா பள்ளியில் பயின்றார். பின்னர் இவர் வங்காளதேச கிரிரா ஷிக்கா புரோதிஷ்டா எனும் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றார்.
உள்நாட்டுப் போட்டிகள்
[தொகு]ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இவர் வங்காளதேச அணி தலைவராக இருந்தார். அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். அதில் இரண்டு 100 ஓட்டங்கள் அடங்கும். மேலும் அந்த தொடரின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.2012 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச துடுப்பாட்ட போட்டியில் விளையாடினார். சஹாரா துடுப்பாட்ட கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.டிசம்பர் 2 அன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் 100 ஓட்டங்களை பதிவு செய்தார். அந்தப் போட்டியில் 120 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் .மேலும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.தனது இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெற்ற வங்காளதேசம் துடுப்பாட்ட வீரர் எனும் பெருமை பெற்றார்.
செப்டம்பர் 2017 இல், முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார், 2017–18 தேசிய கிரிக்கெட் லீக்கில் ரங்க்பூர் துடுப்பாட்ட அணிிக்குகு எதிராக குல்னா துடுப்பாட் ட அணிிக்காக் 216 ஓட்டங்கள் எடுத்தார்.[1]
2018–19 வங்காளதேச பிரீமியர் லீக்கிற்கான வரைவுப் பட்டியலில் இடம் பெற்றதைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், இவர் கொமிலா விக்டோரியன் அணிக்கான அணியில் இடம் பெற்றார்.[2]
2018–19 வங்காளதேச கிரிக்கெட் லீக்கில் ஆறு போட்டிகளில் 658 ஓட்டங்கள் எடுத்தார் இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[3] 2018–19 ஆம் ஆண்டில் நடைபெற்ற டாக்கா பிரீமியர் பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியில் பிரைம் வங்கி துடுப்பாட்ட அணியின் சார்பாக விளையாடிய இவர் 16 போட்டிகளில் 552 ஓட்டங்கள் எடுத்தார் இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[4]
சர்வதேச போட்டிகள்
[தொகு]இவர் 2012 ஆசிய கோப்பைக்கான வங்காளதேச துடுப்பாட்ட அணியில் இடம் பிடித்தார் .[5] இவர் இலங்கைக்கு எதிராக 8 மார்ச் 2013 அன்று காலியில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். குல்னாவில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 120 ஓட்டங்கள் எடுத்தார் இதனால் ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ வலைதளத்தில் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் இடம்பெற்றார் [6]
பின்னர் இவர் 2015 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான வங்காளதேச அணி சார்பாக விளையாடுவதற்குத் தேர்வானார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Anamul, Ashraful sparkle in rain-hit matches". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bangladesh Cricket League, 2018/19: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
- ↑ "Dhaka Premier Division Cricket League, 2018/19 - Prime Bank Cricket Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
- ↑ "Tamim dropped, Mushfiqur retained captain". ESPNcricinfo. 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ http://www.espncricinfo.com/awards2012/content/story/599153.html