தங்கவேலு பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கவேலு பொறியியல் கல்லூரி
வகைபொறியியல் கல்லூரி
அமைவிடம், ,
வளாகம்காரப்பாக்கம் 600097
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.thangavelu.edu.in/

தங்கவேலு பொறியியல் கல்லூரி ( Thangavelu Engineering College ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

தங்கவேலு பொறியியல் கல்லூரியானது முதலில் சேலத்தில் நிறுவப்பட்டது. இது 1994இல் பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளையின் தலைவரான திரு கே. வி. தங்கபாலு அவர்களால் நிறுவப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியானது சென்னை , ராஜீவ் காந்தி சாலையில் காரப்பாக்கதிற்கு மாற்றப்பட்டது.

கல்வியாளர்கள்[தொகு]

இக்கல்லூரியானது பொறியியல் துறையில் இளநிலை படிப்புகளையும், முதுநிலைப் பிரிவில் பொறியியல், கணினி, வணிகவியல் போன்ற துறைகளில் வழங்குகிறது. இந்த வளாகத்தில் டி. ஜே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மற்றும் டா வின்சி ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் ஆர்கிடெக்சர் ஆகிய மூன்று கல்லூரிகளும் உள்ளன.

சேர்க்கை[தொகு]

  • இக்கல்லூரி சேர்கையானது அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மூலம் நடக்கிறது.
  • அனைத்து படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரியிலும் கார்ப்பரேட் அலுவலகத்திலும் கிடைக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "About Thangavelu Engineering College". பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.

வெளி இணைப்புகள்[தொகு]