நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு (இந்தியா)
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு | |
---|---|
16வது மக்களவை | |
நிறுவப்பட்ட ஆண்டு | 1950 |
நாடு | இந்தியா |
தலைமை | |
நிறுவனர் | இந்திய மக்களவைத் தலைவர் |
குழுவின் அமைப்பு | |
இடங்கள் | 30 மக்களவை உறுப்பினர்கள் மட்டும் |
துணைக் குழுக்கள் | |
| |
Rules and pocedures | |
Applicable rules | Rule 310,311 & 312 (page 114 - 115) |
மதிப்பீட்டுக் குழு (Estimates Committee), முற்றிலும் 30 இந்திய மக்களவை உறுப்பினர்களைக் கொண்டது. இக்குழுவின் பதவிக் காலம் 1 ஆண்டு ஆகும். மக்களவையில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்கள் அடிப்படையில் இக்குழுவின் உறுப்பினர்களை இந்திய மக்களவைத் தலைவர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவர்.[1] அமைச்சர்கள் இக்குழுவில் இடம் பெற தகுதி இல்லை. பொதுவாக இக்குழுவின் தலைவராக மக்களவை எதிர்கட்சி தலைவர் தலைமை தாங்குவர்.
பணிகள்
[தொகு]• இந்திய அரசின் அமைச்ச்கங்கள் & துறைகளின் பணிகள் மற்றும் செலவினங்கள் பரிசீலனை செய்தல், ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தியமைக் குறித்து பரிசீலனை செய்தல். திறன்மேம்பாடு மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் துறைகளுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் ஆகும். மதிப்பீட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் [2] மதிப்பீட்டுக் குழு பொது கணக்குக் குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு (இந்தியா)பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு]] மற்றும் நிதித்துறைக்கான நாடாளுமன்றக் நிலைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடி, மதிப்பீடுகள் செய்து தனது அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையும் காண்க
[தொகு]- நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்
- பொது கணக்குக் குழு
- நாடாளுமன்றக் கூட்டுக் குழு (இந்தியா)
- பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு (இந்தியா)
- நாடாளுமன்ற நிதிக் குழு (இந்தியா)
- பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2019 - 2020 ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியல்
- ↑ "Murli Manohar Joshi to head Estimates Committee; Shanta Kumar is COPU chief". The Economic Times. 2014-08-22. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/murli-manohar-joshi-to-head-estimates-committee-shanta-kumar-is-copu-chief/articleshow/40689189.cms.