உள்ளடக்கத்துக்குச் செல்

தாம்செனோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்செனோலைட்டு Thomsenolite
தாம்செனோலைட்டும் சில போலி கனசதுர ரால்சிடோனைட்டு
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுNaCaAlF6·H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை, இளஞ்சிவப்பு, பழுப்பு. செலுத்தப்பட்ட ஒளியில் நிறமற்றது.
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு
On {001}; {110} தனித்தன்மை.
முறிவுஒழுங்கற்றும் சம்மற்றும்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளி கசியும்
அடர்த்தி2.981 g/cm3

தாம்செனோலைட்டு (Thomsenolite) என்பது NaCaAlF6•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு புளோரைட்டு வகைக் கனிமமாகும். கிரையோலைட்டு கனிமத்தின் படிப்படியாக மாற்றமடைந்த வடிவம் தாம்செனோலைட்டு ஆகும் [1].

கிரீன்லாந்து நாட்டின் இவிடூட்டு நகரத்தில் 1868 ஆம் ஆண்டு தாம்செனோலைட்டு கண்டறியப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்சு பீட்டர் யோர்கென் யூலியசு தாம்சன் (1826-1909) இக்கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  2. Mindat.org entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்செனோலைட்டு&oldid=3595891" இலிருந்து மீள்விக்கப்பட்டது