தாம்செனோலைட்டு
Appearance
தாம்செனோலைட்டு Thomsenolite | |
---|---|
தாம்செனோலைட்டும் சில போலி கனசதுர ரால்சிடோனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | NaCaAlF6·H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, வெண்மை, இளஞ்சிவப்பு, பழுப்பு. செலுத்தப்பட்ட ஒளியில் நிறமற்றது. |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு On {001}; {110} தனித்தன்மை. |
முறிவு | ஒழுங்கற்றும் சம்மற்றும் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளி கசியும் |
அடர்த்தி | 2.981 g/cm3 |
தாம்செனோலைட்டு (Thomsenolite) என்பது NaCaAlF6•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு புளோரைட்டு வகைக் கனிமமாகும். கிரையோலைட்டு கனிமத்தின் படிப்படியாக மாற்றமடைந்த வடிவம் தாம்செனோலைட்டு ஆகும் [1].
கிரீன்லாந்து நாட்டின் இவிடூட்டு நகரத்தில் 1868 ஆம் ஆண்டு தாம்செனோலைட்டு கண்டறியப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்சு பீட்டர் யோர்கென் யூலியசு தாம்சன் (1826-1909) இக்கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- ↑ Mindat.org entry