இயக்க நரம்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயக்க நரம்பணுக்கள் (ஆங்கிலம்: Motor neuron) மூளை மற்றும் தண்டுவடத்தில் காணப்படும் நரம்பணுக்களின் ஒரு வகையாகும். இவைகள் மூளை மற்றும் தண்டுவடம் பெற்ற உணர்வுகளுக்கு ஏற்றவாறு கட்டளைகளை வெளிக்காவும் நரம்பு மூலம் உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது.[1][2]

நுண்ணோக்கியின் மூலம் இயக்க நரம்பணு

இயக்க நரம்பணுக்கள் பெரு மூளையின் இயக்கு புறணி, முள்ளந்தண்டு வடம் மற்றும் மூளைத்தண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இயக்க நரம்பணு வெளிக்காவும் நரம்புகள் மூலம் கட்டளைகளை கடத்துகிறது. வெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[3][4][5]

உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்

வகைகள்[தொகு]

இயக்க நரம்பணு இரு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள் முறையே மேல் இயக்க நரம்பணு, கீழ் இயக்க நரம்பணு ஆகும்.

மேல் இயக்க நரம்பணு[தொகு]

பெரு மூளையின் புறணியில் உள்ள இயக்க நரம்பணுக்களே மேல் இயக்க நரம்பணுக்கள் ஆகும். இவைகளின் நரம்பிழை இடை நரம்புகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்களுடன் இணைக்கப்படுகிறது.[1]

கீழ் இயக்க நரம்பணு[தொகு]

முள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்கள் நரம்பிழைகள் மூலம் ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும். கீழ் இயக்க நரம்பணு ஆல்பா, பீட்டா, காமா என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Pocock, Gillian; Richards, Christopher D. (2006). Human physiology : the basis of medicine (3rd ). Oxford: Oxford University Press. பக். 151–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-856878-0. https://archive.org/details/humanphysiologyb0000poco_h3s4. 
  2. 2.0 2.1 Russell, Peter (2013). Biology - Exploring the Diversity of Life. Toronto: Nelson Education. பக். 946. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-17-665133-6. 
  3. Mader S. S. (2000): Human biology. McGraw-Hill, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-290584-0; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-117940-2.
  4. Hall J. E., Guyton A. C. (2006): Textbook of medical physiology, 11th edition. Elsevier Saunders, St. Louis, Mo, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1.
  5. Warrell D. A., Cox T. M., Firth J. D. (2010): The Oxford Textbook of Medicine பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம் (5th ed.). Oxford University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்க_நரம்பணு&oldid=3581388" இலிருந்து மீள்விக்கப்பட்டது