முப்பிரி எக்சு நோய்க்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பிரி எக்சு நோய்க்குறி (Triple X syndrome) அல்லது முப்படி எக்சு நோய்த்தொகை என்பது பெண்களின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் ஒரு எக்சு நிறப்புரி அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.[1] இதனால் சராசரியை விட சற்று உயரமாக வளர்ச்சி அடைவர்[1] மற்ற பெண்களுக்கும் இவர்களுக்கும் உடல் ரீதியாக வேறு எந்த வேருபாடுகளும் இருக்காது.கருத்தரிப்பிலும் எந்த பிரச்சினைகளும் வராது.[1] ஆனால் சில சமயங்களில் கற்றல் குறைபாடுகள் , தசைகளின் குறைந்த அளவு சுருக்கம் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் வரலாம்.[1]

முப்பிரி எக்சு நோய்க்குறி பல காரணங்களால் ஏற்படுகிறது.[1] இது மரபுவழியாக பரவும் தன்மை கொண்டது அல்ல.[1] உயிரணு மரபியல் சோதனை மூலம் இதனை கண்டறியலாம்.[2]

பேசுவதற்கான சிகிச்சை, உடல் ரீதியிலான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற பல சிகிச்சைகள் உள்ளன.[2] 1,000 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[3] இதில் 90 விழுக்காடு பெண்கள் அறிகுறி இல்லாததால் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[3] இந்த நோய் 1959 ஆம் ஆண்டில் தான் கண்டறியப்பட்டது.[4]

அறிகுறிகள்[தொகு]

முப்பிரி எக்சு நோய்க்குறி பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிய இயலாததால் இந்த நோயின் தாக்கங்களை வகைப்படுத்த இயலவில்லை.

உடல் ரீதியிலான் அறிகுறிகள்[தொகு]

சராசரியை விட சற்று உயரமான வளர்ச்சி, கண் இமை மடிதல், தசைகள் வலிமையின்மை, ஐந்தாவது விரல் நான்காவது விரலைநோக்கி மடிதல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.[3] தலை சிறியதாக இருக்கும்.[5] இயல்பாக மற்ற பெண்களின் வளர்ச்சியை விட சற்று அதிகமான உயரம் கொண்டிருப்பதே பொதுவான அறிகுறியாகும்.

உளவியல்[தொகு]

முப்பிரி எக்சு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொழி வளர்ச்சியில் காலதாமதம் ஏற்படலாம்.[6] மேலும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சராசரி நுண்ணறிவு எண் 20 க்கும் கீழாக இருக்கும்.[6] தன் மதிப்பின்மை, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஏற்படும்.[3][6]

சிகிச்சை[தொகு]

நிலையான, சுகாதாரமான வீட்டுச் சூழ்நிலையில் இருந்தால் முன்னேற்றம் ஏற்படலாம்.[6]

கொள்ளை நோயியல்[தொகு]

1,000 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[3] மேலும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு நாளில் பிறக்கும் 10 பெண்களில் ஐந்து பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "triple X syndrome". GHR. June 2014. Archived from the original on 27 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  2. 2.0 2.1 "47 XXX syndrome". GARD. 16 March 2016. Archived from the original on 5 November 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Tartaglia, NR; Howell, S; Sutherland, A; Wilson, R; Wilson, L (11 May 2010). "A review of trisomy X (47,XXX).". Orphanet journal of rare diseases 5: 8. doi:10.1186/1750-1172-5-8. பப்மெட்:20459843. 
  4. Wright, David (2011) (in en). Downs: The history of a disability. OUP Oxford. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780191619786 இம் மூலத்தில் இருந்து 2017-09-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170911010828/https://books.google.ca/books?id=lm0BrR0POj8C&pg=PA125. 
  5. "Triple X syndrome". Mayo Clinic. August 17, 2010. Archived from the original on 2012-02-28.
  6. 6.0 6.1 6.2 6.3 Otter, M; Schrander-Stumpel, CT; Curfs, LM (March 2010). "Triple X syndrome: a review of the literature.". European Journal of Human Genetics 18 (3): 265–71. doi:10.1038/ejhg.2009.109. பப்மெட்:19568271. 
  7. National Library of Medicine (2007). "Genetics Home Reference: Triple X syndrome". Archived from the original on 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.