சுஜான்பாயி
Appearance
சுஜான்பாயி போன்சலே Sujana Bai Bhosale | |
---|---|
தஞ்சாவூர் மராத்திய சத்ரபதி | |
ஆட்சிக்காலம் | 1737-1738 |
முன்னையவர் | இரண்டாம் வெங்கோஜி |
பின்னையவர் | இரண்டாம் சாகுஜி/காட்டுராஜா |
இறப்பு | 1738 |
மரபு | போன்சலே |
மதம் | Hinduism |
சுஜான்பாயி போன்சலே (Sujana Bai Bhonsle or Sujan Bai Bhonsle) என்பவர் போன்சலே மரபைச் சேர்ந்த தஞ்சாவூர் மராட்டிய மன்னரான இரண்டாம் வெங்கோஜியின் மனைவி ஆவார். இவரது கணவர் இறந்த 1737 முதல் 1738இல் பதவியில் இருந்து இறக்கப்படும்வரை ஆட்சி செய்தார்.
ஆட்சிகாலம்
[தொகு]சுஜான்பாயி 1737இல் தன் கணவரான இரண்டாம் வெங்கோஜி இறந்த 1737 முதல் அரியணை ஏறி ஒரு வருடம் நாட்டை ஆண்டார். சுஜாபாயி அரசி என்றாலும் உண்மையில் அமைச்சரான சையீந்துவிடமே அதிகாரம் இருந்தது. இந்நிலையில் சரபோஜியின் மகன் என்று உரிமையுடன் அரச பதவிக்கு உரிமை கோரிவந்த காட்டுராஜா சுஜான்பாயியை பதவியில் இருந்து இறக்கினார். காட்டுராஜாவுக்கு பிரஞ்சுக்காரர்களின் உதவியும் இருந்தது. சுஜான்பாயியை பதவியில் இருந்து இறக்கிய காட்டு ராஜா தன் பெயரை சாகுஜி (இரண்டாம்) என்று மாற்றிக்கொண்டு அரியணை ஏறினார்.
மேற்கோள்கள்
[தொகு]- 'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.