கோலார் பீடபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலார் பீடபூமி (Kolar Plateau) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடக மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கோலார் தங்கச் சுரங்கங்கள் இந்த பீடபூமியில் அமைந்துள்ளன.

அறிமுகம்[தொகு]

இது அடிப்படையில் ஒரு உலர்ந்த நிலப்பரப்பு மண்டலம் ஆகும். ஆதலால் செம்மறி ஆடுகளின் மேய்ச்சலுக்கு உகந்த புல்வெளி பகுதியாக மட்டும் இது இருக்கின்றது. இது பட்டு மற்றும் பாலுக்கும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கும் பல விவசாய மக்களின் பட்டு உற்பத்திற்கும் இந்த இடம் சிறந்து விளங்குகிறது. வருடாந்திர மழைப்பொழிவானது ஆந்திரப் பிரதேசத்தின் ராயல்சீமா மற்றும் வடாற்காடு பிராந்தியத்தைப் போலவே உள்ளது. இருப்பினும், தெற்கு கோலார் மாவட்டப் பகுதியில் காலநிலை மேற்கு பெங்களூருவைப் போலவே உள்ளது. கோலார் பீடபூமி பல பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளதால், கால்வாய் மூலம் ஒரு ஏரிகளிலிருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லத்தக்கதாக உள்ளது.

உற்பத்திப் பொருள்கள்[தொகு]

இப்பகுதியில் கம்பளிப் போர்வைகள், தோல் பொருள்கள், கைத்தறிப் பட்டு, கரிக்கோல்கள் மற்றும் சொரசொரப்பான பருத்தித் துணிகள் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_பீடபூமி&oldid=3735125" இலிருந்து மீள்விக்கப்பட்டது