குழந்தைகளின் இலவச ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட்ஸ் ரன் பிரீ
Kids Run Free
உருவாக்கம்2010
நிறுவனர்மார்டின் வெர்வெஜ், கேத்தரின் ஓ'ஆர்ரோல் (Martine Verweij and Catherine O'Carroll)
வகைஇளையோர் மற்றும் விளையாட்டுத் தொண்டு நிறுவனம்
தலைமையகம்
  • Birmingham, Coventry, Leamington Spa and Solihull
சேவைப் பகுதி
ஐக்கிய இராச்சியம்
முழக்கம்Start Young, Stay Fit
வலைத்தளம்www.kidsrunfree.co.uk

கிட்ஸ் ரன் பிரீ அல்லது குழந்தைகளின் இலவச ஓட்டம்  (Kids Run Free) என்பது வார்விசையரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஆகும். இது டிசம்பர் 2010 இல் மார்டின் வெர்வெஜ் மற்றும் கேத்தரின் ஓ'ஆர்ரோல் ஆகியோரால் நிறுவப்பட்டது.  

நிகழ்வுகள்[தொகு]

இந்நிறுவனம் 0 முதல் 16 வயது வரையான குழந்தைகளுக்கு மாதாந்திரப் பந்தயங்களை அமைக்கிறது. மாதத்தின் ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் நடைபெறுகிறது. திறனை அல்லது சமூக பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை ஈடுபடுத்துவதில் அமைப்பாளர்கள் கடமைப்பட்டுள்ளனர். பங்குபெறுநர்களுக்கு முடிவு நேரத்தைக் காட்டும் பட்டைக்குறியீடுடைய மணிக்கட்டுப்பட்டைகள் தரப்படுகின்றன. முதல் நிகழ்வு மே 2011 இல் சோலிஹிலும்[1] பின்னர் ஜூலை 2011 இல் லெமின்டன் ஸ்பா, ஏப்ரல் 2012 இல் கோவென்ட்ரி மற்றும் மே 2012 இல் பர்மிங்ஹாம் ஆகிய இடங்களிலும் நடைபெற்றன.[2]  

புரவலர்கள்  [தொகு]

மார்ச் 2012 முதல், முன்னாள் ஒலிம்பிக் தடகள மற்றும் உலகச் சாதனையாளரான டேவிட் மூர்கிரோஃப்ட் இந்நிறுவனத்தின் புரவலராக பணியாற்றினார். இந்நிறுவனம் நடத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபடுவதோடு, கோவென்ட்ரி போட்டியின் துவக்க விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார்.[3]

சின்னம்[தொகு]

பிப்ரவரி 2012 இல் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு போட்டியைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் சின்னத்திற்குப் பெயரிடப்பட்டது. அப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சின்னத்திற்கு 'டாஷ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.[4]

கூட்டு நிறுவனங்கள்[தொகு]

இந்நிறுவனம் அதன் சகோதரி நிறுவனமான ”ரேஸ்வேசு”டன் கூட்டாக இணைந்து செயல்படுகிறது. ரேஸ்வேசு, பெரியவர்களுக்கான பல்வித விளயாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனமாகும்.[5] ரேஸ்வேசு நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது கிட்சு ரன் பிரீ நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Children on the run for fitness". Solihull News. 2011-09-15. Archived from the original on 2013-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
  2. "Your Sport: Kings Heath Kids Run Free event to launch - Birmingham Mail". birminghammail.net. Archived from the original on 2013-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  3. "Olympic legend David Moorcroft launches Kids Run Free project". Coventry Observer. Archived from the original on 2013-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
  4. Published on Monday 27 February 2012 13:00 (2012-02-27). "Creative minds name mascot for Kids Run Free - Community". Leamington Courier. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)CS1 maint: numeric names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Home | Raceways". Raceways.eu. 2012-04-20. Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.

வெளியிணைப்புகள்[தொகு]