பெரி. சிவனடியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரி. சிவனடியார் (7 செப்டம்பர் 1929 - 19 மார்ச் 2004) தமிழகக் கவிஞர் ஆவார். பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது.[1]

பிறப்பும் இளமையும்[தொகு]

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் பெரியண்ணன்-விசாலாட்சிக்கு மகனாக 1929 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் நாளில் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பள்ளிப் பருவம் முதலாகவே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். தம் வாழ்நாளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குப் பெற்றுள்ளார்.

தமிழ்ப் பணிகள்[தொகு]

மதுரை (1981), தஞ்சாவூர் (1995) ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கு பெற்றியுள்ளார். வடமொழி செல்வாக்கிலிருந்தும் இந்தி ஆதிக்கத்திலிருந்தும் தமிழ் மீட்சி இயக்கத்திற்குப் பாட்டு எழுதிய பலருள் இவர் பாட்டும் பலரால் பாராட்டப்பெற்றுள்ளது.[2] வான்மதி, அன்புதென்றல், பொன்னி, மாதவி, தமிழ்ச்செய்தி, கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

கவிதை நூல்கள்[தொகு]

  • கனிக்குவியல்
  • முருகாஞ்சலி
  • சக்தி சரணங்கள்
  • சக்தியும் மைந்தனும்
  • பரமகுருசுவாமி பதிகம்முதலிய பல.

நாடகம்[தொகு]

  • அவளுக்காக

பட்டங்கள்[தொகு]

  • திருப்பனந்தாள் பாவலர் மன்றம் - சிந்தனைக் கவிஞர்
  • மதுராந்தகம் குருபழநி ஆதீனம் - கவிஞரேறு
  • தமிழக அரசு இவருக்கு 1985 இல் திருக்குறள் நெறித்தோன்றல் எனும் விருதினையும்,1991 இல் பாவேந்தர் விருதினையும் அளித்துள்ளது.

பெற்ற பாராட்டுகள்[தொகு]

கண்ணதாசன் இவர் கவித்திறனைப் பாராட்டி ஒரு பாடல் இயற்றியுள்ளார். அப்பாடல்:

சிவனடியான் சிவனடியான் என்கின் றாரே'
சிவனுக்கோ இவனடியான் இல்லை இல்லை
இவன்பாடும் பாடல்களைச் சிவனும் கேட்பான்
என்பதனால் இவனுக்கே சிவன் அடியான்

என்பதாகும்.

இறப்பு[தொகு]

2004 ஆம் ஆண்டு, மார்ச் மூன்றாம் நாளன்று இவர் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இருபதாம் நூற்றாண்டு பாவேந்தர் பாராதிதாசன் பரம்பரை-செம்மொழி சிறப்பிதழ்-த சண்டே இந்தியன்-2010 பக்கம்-44.
  2. முனைவர் மு.பழனியப்பன்-சிந்தனைக் கவிஞர் பெரி.சிவனடியான்-கலைஞன் பதிப்பகம்-2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரி._சிவனடியார்&oldid=3724256" இலிருந்து மீள்விக்கப்பட்டது