மின் ஒளிபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின் புறம் ஒளியினையும் முன் புறம் எழுத்களையும் கொண்ட ஓர் மின் விளக்கப்படம்.

மின் ஒளிபடம் (E chart, அல்லது tumbling E chart,) என அழைக்கப்படும் இவ்வகை உருள் அமைப்பிலான மின் விளக்கப்படங்கள் கண் மருத்துவத்தில் நோயாளிகளின் பார்வைத் திறனை சோதித்தறிய பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

இலத்தீன் எழுத்துக்களை வாசிக்க தெரியாத மக்கள் தாம் காணும் எழுத்துக்களின் வடிவத்தினை எளிதில் தம்மை சோதிக்கும் கண்சிகிட்சை நிபுணரிடம் வெளிபடுத்த இவ்வகை வரைபடம் மிகவும் பயனுடையதாக உள்ளது. எழுத்தறிவில்லா மக்களுக்கு மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளுக்கும் பார்வை திறனை கண்டறிய இந்த வரைபடம் மிகவும் பயன்பாடு மிகுந்ததாக உள்ளது. பேச்சு மொழியை மட்டும் கொண்ட நாடுகளிலும் இந்த வரைபடம் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த வரைபடத்தில் ஆங்கில எழுத்தான E ஆனது பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. அதாவது மேலாக, கீழாக, வலது, இடது புறமாக என்று.  கீழிருந்து மேலாக செல்ல செல்ல எழுத்துக்களின் அளவானது குறைந்து கொண்டே செல்கிறது. எவ்வளவு தொலைவில் இருந்து கண்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் எந்த வரிசையில் உள்ள எழுத்துக்களை அடையாளம் காண்கிறார் என்பதை கொண்டு அவரின் பார்வை திறன் மதிப்பிடப்படுகிறது. இது  சினெல்லன் அட்டவணை முறையில் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் ஒரே வடிவமான எழுத்துக்களே பல்வேறு கோணங்களில் அடையாளம் காணப்படுகின்றன. 

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • Basak, Samar K. Ophthalmology Oral and Practical (3rd ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86793-66-6. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_ஒளிபடம்&oldid=3403870" இலிருந்து மீள்விக்கப்பட்டது