சினெல்லன் அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினெல்லன் அட்டவணை

சினெல்லன் அட்டவணை (Snellan chart) என்பது கண்ணின் பார்வைத் திறனை அளக்கப் பயன்படும் வரைபடம் ஆகும். 1862 ஆம் ஆண்டு ஹெர்மன் ஸ்னெல்லன் என்னும் டச்சு அறிவியலாளரின் நினைவால் இப்பெயர் சூட்டப்பட்டது.

விளக்கம்[தொகு]

பழைய வரைபடத்தில் இறங்குமுகமாக பதினோரு வரிகளில் எழுத்துகள் அச்சிடப்பட்டிருந்தன. முதல் வரியில் ஒரு எழுத்தும் அடுத்தடுத்த வரிகளில் எழுத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அளவு குறையும். கண் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் ஒற்றைக் கண்ணை மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் இவற்றை படிக்க வேண்டும். நபரிடம் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இந்த வரைபடம் மாட்டப்பட்டிருக்கும். கடைசி வரியில் இருக்கும் எழுத்தை படிக்கும் ஒருவருக்கு கண் பார்வை சரியாக உள்ளது என்பது புலனாகும். பெரும்பாலும் எழுத்துகள் ஆங்கில எழுத்துகளாக இருந்தாலும், தமிழிலும், பிற மொழிகளிலும், குறியீடுகளிலும் இந்த வரைபடத்தைக் காண முடியும். தொலைவிற்கும் பார்வைக்கும் விகிதம் ஏற்படுத்தி விடை காண்பர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினெல்லன்_அட்டவணை&oldid=1451888" இலிருந்து மீள்விக்கப்பட்டது