பிடாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிடாரி, கோபக் குணக் கொண்ட கிராமப் பெண் காவல் தெய்வம் ஆகும். கிராமத்தின் வெளியில் குடிகொண்டிருக்கும் பிடாரியம்மனை காளியின் அம்சமாக கிராம மக்கள் போற்றி வழிபடுகின்றனர். தமிழகக் கிராமக் கோயில்களில் பிடாரியம்மன் கோயில்கள் பல உள்ளது.

பெண்களின் கருவை காப்பதால் பிடாரியை, கருக்காத்தம்மன் எனும் பெயரில் பெண்கள் வழிபடுகின்றனர். [1]

வட்டார வழக்கில் பிடாரி[தொகு]

கிராமங்களில் ஒருவர் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால், அல்லது பெற்றோர்களுக்குக் கட்டுப்படாதவர்க்ளை அடங்காப்பிடாரி என்ற பெயரில் அழைப்பர். மேலும் அடக்கமே இல்லாத மனைவியை அடங்காப்பிடாரி என்றும் அழைப்பர். [2]

பிடாரி குறித்தான பழமொழிகள்[தொகு]

  • ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல
  • பிடாரியைப் பெண்டு வைத்துக்கொண்டது போல
  • பிடாரிக்குக் காப்புக் கட்டு

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பெண்களின் கருவை காக்கும் பிடாரி கருக்காத்தம்மன் கோவில்
  2. பிடாரி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடாரி&oldid=2258134" இலிருந்து மீள்விக்கப்பட்டது