நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ செஞ்சுரி புக் ஹவ்ஸ் (பி) லிட்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகைசென்னை, இந்தியா
தலைமையகம்சென்னை, இந்தியா
உற்பத்திகள்நூல்கள், இதழ்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்பது 60 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும். இது சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். இது தன் 18 கிளைகள் மூலமாக நூல்களை விற்பனை செய்துவருகிறது. இந்தப் பதிப்பகம் இந்திய பொதுவுடமைக் கட்சியால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவராக இரா. நல்லகண்ணு அவர்களும் இயக்குநர்களில் ஒருவராக தா. பாண்டியன் உள்ளார். இந்தப் பதிப்பகம் உங்கள் நூலகம் என்ற இதழையும் நடத்தி வருகிறது.

வெளியீடுகள்[தொகு]

பல்வேறு துறைசார்ந்த நூல்களைக் இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. சங்க இலக்கியத்தை ராஜம் பதிப்பகத்திலிருந்து வாங்கி அனைத்தையும் தொகுத்து முதல் முதல் வெளியிட்டது, ஜீவா அவர்களின் எழுத்தை முழுத் தொகுப்பாக வீ.அரசு தலைமையில் ஒரு குழு அமைத்து ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளது, சிங்காரவேலர் எழுதிய அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது, அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக 40 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

தொலைநோக்கோடு செயல்படுவதே என்.சி.பி.எச்-ன் தனிச்சிறப்பு - தொல்.திருமாவளவன்