உங்கள் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உங்கள் நூலகம் தமிழ் நாட்டில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்தும் மாத இதழ். 1985ம் ஆண்டு துவங்கப்பட்டு 1990 வரை வெளிவந்தது. பின் மீண்டும் 2005ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்காலம் வரை வெளியாகிக் கொண்டிருக்கிறது. 2008 செப்டம்பர் வரை இருமாத இதழாக வெளிவந்தது.பின்னர் இப்போதுவரை மாத இதழாக வெளிவந்துகொண்டிருகின்றது. 2010 டிசம்பர் வரை இவ்விதழின் ஆசிரியராக ஆர்.பார்த்தசாரதி இருந்தார்.பழம்பெரும் தொழிற்சங்கவாதியும்,மார்க்சியப் புத்திஜீவியுமான ஆர்.பார்த்தசாரதி 2011 ஜனவரியில் இயற்கை எய்தினார். அதற்குப் பின்பு சண்முகம் சரவணன் பொறுப்பாசிரியராக உள்ளார். இவ்விதழின் நோக்கம் புதிய நூல்கள் பற்றிய அறிமுகத்தை வழங்குவதும், வாசிப்பு விழிப்புண்ர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்கள்_நூலகம்&oldid=1798586" இருந்து மீள்விக்கப்பட்டது