தா. பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தா.பாண்டியன்
D. Pandian.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 25, 1932(1932-09-25)
கீழவெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி, தமிழ்நாடு
இறப்பு பெப்ரவரி 26, 2021(2021-02-26) (அகவை 88)[1]
சென்னை அரசுப் பொது மருத்துவமனை , சென்னை
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி
தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍ செயலாளர்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜாய்ஸ் பாண்டியன் (தி. 1956; இறப்பு: 2010)

தா. பாண்டியன் (D. Pandian, 25 செப்டம்பர் 1932 - 26 பெப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார்.[2] இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.[3] இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.[4][5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பாண்டியன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளைமலைப்பட்டி என்ற ஊரில் தாவீது - நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். பான்டியனின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

மறைவு[தொகு]

இவர் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26, 2021 அன்று காலமானார்.[6][7] இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ஜோயிசு பாண்டியன் 2010 ஆம் ஆண்டில் தனது 76-வது அகவையில் காலமானார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரேம் குமார் எஸ்.கே, தொகுப்பாசிரியர் (21-Feb-2021). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!. விகடன் இதழ். https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away. 
  2. "Cities / Coimbatore : Mutharasan, CPI State secretary". The Hindu (2015-03-01). பார்த்த நாள் 2015-11-24.
  3. DIN, தொகுப்பாசிரியர் (21-Feb-2021). தா.பாண்டியன் மறைவு: ராமதாஸ் இரங்கல். தினமணி நாளிதழ். https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/d-pandians-death-ramadas-mourning-3570601.html. 
  4. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 10 ஏப்ரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
  5. Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha பரணிடப்பட்டது 9 ஏப்ரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
  6. பிரேம் குமார் எஸ்.கே, தொகுப்பாசிரியர் (21-Feb-2021). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!. விகடன் இதழ். https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away. 
  7. DIN, தொகுப்பாசிரியர் (21-Feb-2021). கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார். தினமணி நாளிதழ். https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/senior-leader-of-the-communist-party-tha-pandian-passed-away-3569968.html. 
  8. "CPI leader Pandian's wife Joyce passes away".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._பாண்டியன்&oldid=3112237" இருந்து மீள்விக்கப்பட்டது