காக்ஸ் பஜார்

ஆள்கூறுகள்: 21°26′30″N 91°58′30″E / 21.44167°N 91.97500°E / 21.44167; 91.97500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்ஸ் பஜார்
Panowa/yellow flower /কক্সবাজার'
(সমুদ্রের রাজা)
நகரம்
Skyline of காக்ஸ் பஜார்
நாடு வங்காளதேசம்
கோட்டம்சிட்டகாங் கோட்டம்
மாவட்டம்காக்ஸ் பஜார் மாவட்டம்
பரப்பளவு
 • நகரம்6.85 km2 (2.64 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை (2007 est.)Total population represents population in city and metro represents entire district.[1]
 • நகரம்51,918
 • அடர்த்தி7,579.27/km2 (19,630.2/sq mi)
 • பெருநகர்1,20,480
நேர வலயம்வங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)

காக்ஸ் பஜார் (Cox's Bazar) (வங்காள மொழி: কক্সবাজার, வங்காளதேச நாட்டின் சிட்டகாங் கோட்டத்தில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் வங்காள விரிகுடாவில் 120 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை கொண்ட பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாகும். இந்நகரத்தின் கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும்.[2][3][4] காக்ஸ் பஜார் நகரம், சிட்டகாங் நகரத்திலிருந்து தெற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. காக்ஸ் பஜார் நகரத்தின் பழைய பெயர் பனோவா ஆகும். பனோவா என்பதற்கு வங்காள மொழியில் மஞ்சள் பூ எனப் பொருள்படும்.

பெயர்க் காரணம்[தொகு]

தற்போது காக்ஸ் பஜார் என அழைக்கப்படும் இப்பகுதியை முன்னர் பனோவா (மஞ்சள் பூ) என வங்காள மொழியில் அழைக்கப்பட்டது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியினர் இப்பகுதியைக் கைப்பற்றி வணிக மையமாக மாற்றினர். வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநராக இருக்கும் போது கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தலைவரான கேப்டன் ஹிரம் காக்ஸ் (இறப்பு 1799) என்பவர் பனோவா பகுதியின் கண்காணிப்பாளாராக பணியில் இருந்தார். பணியின் போது பர்மிய அரக்கான் பகுதி அகதிகளுக்கும், உள்ளூர் ராக்கெயின் மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநிறுத்தியதால், அவரின் மறைவுக்குப் பின்னர் பனோவா பகுதிக்கு, காக்ஸ்சின் நினைவாக காக்ஸ் பஜார் எனப் பெயரிடப்பட்டது. காக்ஸ் பஜார் பகுதி தற்போது வங்காளதேசத்தின் முக்கிய பன்னாட்டு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[5]

நகரம்[தொகு]

தென்கிழக்கு வங்காளதேசத்தில் வங்காள விரிகுடாவில் 6.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 51,918 மக்கள் தொகையும் கொண்ட காக்ஸ் பஜார் நகராட்சி மன்றம் 1869-இல் நிறுவப்பட்டது.[6][6] காக்ஸ் பஜார் வானூர்தி நிலையம் சிட்டகாங் மற்றும் பிற நகரங்களுடன் இணைக்கிறது [7]மூன்று இலட்சம் ரோகிஞ்சா மக்கள் அகதிகளாக காக்ஸ் பஜார் நகரத்திலும், நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்கின்றனர். [8]காக்ஸ் பஜாரின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 7579 ஆக உள்ளது. இந்நகரத்தில் வங்காள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் ரோகிஞ்சா மொழிகள் பேசப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

காக்ஸ் பஜார் நகரத்தில் காக்ஸ் பஜார் அரசு சட்டக் கல்லூரி, காக்ஸ் பஜார் அரசுக் கல்லூரி, காக்ஸ் பஜார் அரசு மகளிர் கல்லூரி, காக்ஸ் பஜார் அரசு மருத்துவக் கல்லூரி, காக்ஸ் பஜார் நகரக் கல்லூரி, ராமு பட்டப்படிப்பு கல்லூரி, உக்கியா பட்டப்படிப்பு கல்லூரி, தெக்நாப் பட்டப்படிப்பு கல்லூரி, காக்ஸ் பஜார் அரசு உயரிநிலைப் பள்ளி, காக்ஸ் பஜார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

காக்ஸ் பஜாரின் பொருளாதாரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் காக்ஸ் பஜாரில் பன்னாட்டு உணவகங்கள், விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளது. மேலும் மீன்பிடி தொழில் மூலம் போதுமான வருவாய் பெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Area, Population and Literacy Rate by Paurashava −2001" (PDF). Bangladesh Bureau of Statistics. Archived from the original (PDF) on 17 December 2008.
  2. Ethirajan, Anbarasan (26 December 2012). "Bangladesh's Cox's Bazar: A paradise being lost?". BBC World. http://www.bbc.com/news/world-asia-19340259. 
  3. Panday, V.C., தொகுப்பாசிரியர் (2004). Environment, Security and Tourism Development in South Asia: Tourism development in South Asia. Environment, Security and Tourism Development in South Asia. 3. New Delhi: Gyan Publishing House. பக். 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8205-139-3. https://books.google.com/books?id=ByQi2kN7FNgC&pg=PA100. 
  4. The Europa World Year Book 2003. Taylor & Francis. 2003. பக். 679. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85743-227-5. https://books.google.com/books?id=XLvU9lroRuUC&pg=PA679. 
  5. Mahmud, Tarek (31 August 2013). "Seashores to get tourist police". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150618021612/http://www.dhakatribune.com/safety/2013/aug/31/seashores-get-tourist-police. 
  6. 6.0 6.1 Alam, Badiul (2012). "Cox's Bazar Sadar Upazila". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Cox%E2%80%99s_Bazar_Sadar_Upazila. 
  7. "Cox's Bazar, Bangladesh". Encyclopædia Britannica. 12 January 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2008.
  8. 300,000 Rohingya living in Cox’s Bazar areas, Bangladesh

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்ஸ்_பஜார்&oldid=3537038" இலிருந்து மீள்விக்கப்பட்டது