கரேன் ஆம்சுட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரேன் ஆம்சுட்ராங்

கரேன் ஆம்சுட்ராங் ( Karen Armstrong 14, நவம்பர் 1944) பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.[1] இலண்டனில் வாழும் இவர் மதங்களை ஒப்பாய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். உரோமன் கத்தோலிக்க மத சகோதரியாக இருந்த இவர், பழமைவாதத்தைக் கைவிட்டு தாராள சிந்தனையுடன் கிறித்தவ மதக் கொள்கையைக் கடைப் பிடித்தார்.

இசுலாம் வரலாறு, முகமது நபி வரலாறு, கடவுளின் வரலாறு, செருசலம், யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றின் அடிப்படைவாதம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். உலகில் இக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இரக்கமும் அருளும் கொண்டு மக்கள் வாழவேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார்.

உசாத்துணை[தொகு]

மேலும் படித்தறிய[தொகு]

http://www.theguardian.com/profile/karenarmstrong

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேன்_ஆம்சுட்ராங்&oldid=2719358" இலிருந்து மீள்விக்கப்பட்டது