வெடிக்கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்வேர்ப்பில் பாமியானி இசுட்ராடாவுக்கு அண்மையில் வெடிக்கப்பல்கள்

வெடிக்கப்பல் (Hellburner) என்பது, ஒல்லாந்தக் கலகக்காரர்களுக்கும், அப்சுபர்க்குகளுக்கும் இடையில் இடம்பெற்ற எண்பது ஆண்டுப் போரில் ஆன்ட்வெர்ப் முற்றுகையின்போது பயன்படுத்தப்பட்ட சிறப்புத் தீக்கப்பல் ஆகும். மிதக்கும் வெடிகுண்டுகளான இவை எசுப்பானிய முற்றுகையாளர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.[1] வெடிக்கப்பல்கள் தொடக்ககாலப் பேரழிவு ஆயுதங்கள் என விபரிக்கப்பட்டன.[2]

வரலாறு[தொகு]

ஆன்ட்வீப் கப்பல் பாலத்துக்கு எதிரான முதல் பயன்பாடு[தொகு]

வெடிக்கப்பல்கள் முதலில் பெடெரிகொ கியாம்பெல்லி என்னும் இத்தாலியப் பொறியாளரால் கட்டப்பட்டன. நகரத்தைக் காப்பாற்றுவதற்காக கலகக்காரர்களை உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆதரித்த இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் இக்கப்பல்களை உருவாக்க இப்பொறியாளரை அமர்த்தியிருந்தார். 1585 மழைக் காலத்தில், எசுப்பானிய நெதர்லாந்தின் அப்சுபர்க்குப் படைகளின் கட்டளைத் தளபதியான அலெக்சாண்டர் பர்னீசின் படைகள் ஆன்ட்வேர்ப்பை முற்றுகையிட்டன. இவர், நகரத்தின்மீது விநியோகத்தடை விதித்து மக்களைப் பட்டினி போடுவதற்காக செல்ட் ஆற்றுக்குக் குறுக்காக எண்ணூறு அடி நீளமான கப்பல் பாலம் ஒன்றை அமைத்திருந்தார். இது பெப்ரவரி 25ம் தேதி நிறைவடைந்தது. நகருக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கு கப்பல் பாலத்தைத் தகர்ப்பது அவசியமாக இருந்தது.

கியாம்பெல்லி முதலில் மூன்று இடைத்தர அளவு கொண்ட சரக்குக் கப்பல்களான ஒராஞ்சே, போஸ்ட், கிடென் லீயூவ் ஆகியவற்றை பயன்படுத்த முன்மொழிந்தார். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படாமல், இரண்டு சிறிய கப்பல்களே வழங்கப்பட்டன. எழுபது தொன்கள் எடை கொண்ட போர்ச்சூன், ஹோப் ஆகிய இரு கப்பல்களே இவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Swanger, Wm. Jherek, Military science in the 16th century (PDF), p. 37, archived from the original (PDF) on 2007-02-28, பார்க்கப்பட்ட நாள் 2015-11-13. Class handout.
  2. O'Connell, Robert L (1990), Of Arms and Men: A History of War, Weapons, and Aggression, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195053609 (p. 199)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிக்கப்பல்&oldid=3910766" இலிருந்து மீள்விக்கப்பட்டது