உள்ளடக்கத்துக்குச் செல்

தீக்கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோல்பே சண்டையில் ஒல்லாந்தத் தீக்கப்பல் ஆங்கிலேயரின் தலைமைக் கப்பலான ரோயல் யேம்சு கப்பலைத் தாக்குகின்றது. இளைய வில்லெம் வான் டி வெல்டேயின் ஓவியம்

தீக்கப்பல் (fireship) என்பது, மரத்தாலான துடுப்பு அல்லது பாய்க்கப்பல்களின் காலத்தில், எரியக்கூடிய பொருட்களால் நிரப்பப்பட்டு, வேண்டுமென்றே தீவைக்கப்பட்டு எதிரிக் கப்பல்களை நோக்கிச் செலுத்துவதற்கான கப்பல்கள் ஆகும். கடற்போர்களில், இக்கப்பல்கள் எதிரிக் கப்பல்கள் இடையே செல்லும்போது அக்கப்பல்களைச் சேதத்துக்கு உள்ளாக்கவோ அல்லது எதிரிப் படைகளிடையே பீதியை உருவாக்கி அவர்களது படை வியூகங்களைச் சிதைக்கவோ செய்கின்றன.[1] பழைய, தேய்மானம் அடைந்த கப்பல்கள் அல்லது பெருஞ் செலவின்றி இதற்காகவே கட்டப்பட்ட கப்பல்கள் தீக்கப்பல்களாகப் பயன்படுத்தப்பட்டன. வெடிக்கப்பல்கள் (hellburner) என்பன, தீக்கப்பல்களின் ஒரு வேறுபாடு ஆகும். வெடிக்கப்பல்கள், எதிரிக் கப்பல்களுக்கு அண்மையில் வெடிக்கச் செய்யப்பட்டு அக்கப்பல்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. தீக்கப்பல்கள் எசுப்பானியக் கடற்படைக்கு எதிரான கிரேவ்லைன்சுச் சண்டையில் பிரித்தானியர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Fireship and its Role in the Royal Navy by James Coggeshall. Master's Thesis, Texas A&M University, 1997
  2. The Fireship and its Role in the Royal Navy by James Coggeshall. Master's Thesis, Texas A&M University, 1997, pp. 7-11

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்கப்பல்&oldid=1963085" இலிருந்து மீள்விக்கப்பட்டது