கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம்
கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம் | |
---|---|
தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம் | |
அமைவிடம் | கல்லுக்கூட்டம் |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்கத் திருச்சபை |
வலைத்தளம் | saintfatima.in |
வரலாறு | |
அர்ப்பணிப்பு | தூய பாத்திமா அன்னை |
நேர்ந்தளித்த ஆண்டு | 1952 |
முன்னாள் ஆயர்(கள்) | பீட்டர் ரெமிஜியூஸ் |
Architecture | |
நிலை | தனிப்பங்கு |
இயல்புகள் | |
Bells | 1 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | குழித்துறை |
குரு | |
பேராயர் | அந்தோணி பாப்புசாமி |
ஆயர் | ஜெரோம் தாஸ் வறுவேல் |
குரு(க்கள்) | அருட்பணி க. சுனில் |
கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம் என்பது, புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை கத்தோலிக்க கிறித்தவ மறை மாவட்டத்தின் ஒரு பங்கு ஆலயம் ஆகும்[1]. இவ்வாலயத்தின் பாதுகாவலியாக தூய பாத்திமா அன்னை திகழ்கின்றார்.
வரலாறு
[தொகு]அழகிய நீரோடைக்கு அருகில், அடர்ந்த தென்னைமரங்கள் சூழ அமைந்துள்ள கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம் 1952-ஆம் ஆண்டு பஜனை தொடங்குமிடமாக ஆரம்பிக்கப்பட்டு பின்பு குருசடியாக மாற்றம் பெற்றது. இந்த சிறிய அமைப்பு, 1960-ஆம் ஆண்டு முதல் மாங்குழி பங்கின் கிளைப்பங்காக செயல்படத் தொடங்கியது. ஆகத்து 30, 1964 இல் கோணம்காடு தூய சவேரியார் ஆலயம் பங்காக நியமிக்கப்பட்டபோது, இக்கிளைபங்கு மாங்குழியிலிருந்து பிரிக்கப்பட்டு, கோணங்காட்டின் கிளைப்பங்காக அப்போதைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் ரோச் ஆன்ஞிசாமி அவர்களால் இணைக்கப்பட்டது[2]. இந்நிலையில் 1964-ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் அருள்பணி. இலாசரால் நாட்டப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் கட்டுமானப்பணியானது பல வருடங்களாக முடக்கப்பட்டிருந்தது. இறுதியாக திரு அந்தோணிமுத்து தலைமையில் கட்டடப் பணி முடிய, மே 17, 1987 அன்று ஆயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமியால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
கோணங்காடு பங்கின் கிளைப்பங்காக இருந்த இப்பங்கு, சனவரி 29, 2008 இல் கோட்டாறு ஆயர் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூசால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. 2008-ஆம் ஆண்டு மக்களின் நன்கொடையால் வாங்கப்பட்ட புதிய இடத்தில் தூய பாத்திமா அன்னை அரங்கம் கட்டப்பட்டு, டிசம்பர் 27, 2009 இல் குருகுல முதல்வர் ஏ.மரியதாசனால் அர்ச்சிக்கப்பட்டது[3]. மாங்குழி பங்கின் கிளைப்பங்காக இருந்த பிள்ளவிளை, மார்ச் 28, 2010 இல் கல்லுக்கூட்டம் பங்கின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.
பங்கு குருசடி
[தொகு]2011-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாத்திமா அன்னை குருசடி, ஆகத்து 14, 2011 இல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கு அருள்பணியாளர் இல்லம்
[தொகு]பழைய அருள்பணியாளர் இல்லம் பல இடங்களில் ஒழுகிய நிலையில் இருந்ததமையால், அருள்பணியாளர் தங்கும் புதிய இல்லத்திற்கான அடிக்கல் அக்டோபர் 27, 2013 இல் காலைத் திருப்பலி முடிந்தவுடன், பங்குத்தந்தை அருள்பணி ஏ. ஆன்றூசால் நாட்டப்பட்டது. 6 மாதங்களில் கட்டுமானப் பணி முடிவடைய, முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணி. சகாயதாசால் மே 09, 2014 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. பங்கு அருள்பணியாளரின் இல்லம் இங்குதான் இயங்குகிறது.
பக்த சபைகள்
[தொகு]1960-ஆம் ஆண்டு முதல் மறைக்கல்வியும், 1965 முதல் கிருத்தவ வாழ்வு சமூகமும், 1970 முதல் புனித வின்சென்ட் தே பவுல் சபையும் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 1985-இல் மறைமாவட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பங்கு அருள்பணி பேரவைத் தொடங்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டு வழிபாட்டுக் குழுவும், 1994-இல் அன்பியங்களும், 1997-இல் பாலர்சபை, சிறுவழி இயக்கம் மற்றும் இளம் கிருத்தவ மாணாக்கர் இயக்கமும், 2001-இல் அடித்தள முழுவளர்ச்சி சங்கமும், தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சமூகநல இயக்கங்கள்
[தொகு]இளைஞர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 2008-இல் பெண்கள் இளையோர் இயக்கமும், 2013-இல் ஆண்கள் இளையோர் இயக்கமும், மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த 2013 ஜூலை முதல் பங்களவில் சிறுசேமிப்பும் தொடங்கப்பட்டன. கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த மாதர் தன்னம்பிக்கை இயக்கம் (கைகள் இயக்கம்) 2014-இல் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
புது நீரோடை
[தொகு]மக்களின் வாசிக்கின்ற பழக்கத்தை அதிகப்படுத்தவும், எழுத்து திறமையை மேம்படுத்தவும், பங்கு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளவும் “புது நீரோடை – சமூகமாற்றம் தேடும் மக்கள் இதழ்” என்ற மாத இதழ் 2014 ஜனவரி முதல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அன்பியங்கள்
[தொகு]இந்த ஆலயத்தின் அடிப்படை இயக்கமாக அமைவது அன்பியங்கள் என்கின்ற அடிப்படை கிறித்தவ சமூகங்கள். 248 குடும்பங்களைக் (2015 பங்குத் தரவு) கொண்ட இந்த திருச்சபை, கீழ்க்கண்ட 7 அன்பியச் சமூகங்களாகப் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றது.
- தூய பிரான்சிஸ் சேவியர் அன்பியம்
- தூய சிறுமலர் அன்பியம்
- தூய மோனிக்கம்மாள் அன்பியம்
- தூய அருளானந்தர் அன்பியம்
- தூய டோமினிக் சாமிநாதர் அன்பியம்
- தூய பிரான்சிஸ் அசிசியார் அன்பியம்
- தூய அந்தோணியார் அன்பியம்
இதர அமைப்புகள்
[தொகு]- மறைக்கல்வி
- பாலர் சபை
- சிறுவழி இயக்கம்
- இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்
- இளையோர் (பெண்கள்)
- இளையோர் (ஆண்கள்)
- வின்சென்ட்-தே-பவுல் சபை
- கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (பெண்கள்)
- கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (ஆண்கள்)
- மாதர் தன்னம்பிக்கை இயக்கம்
- பாடகர் குழு
- பீடச்சிறுவர்கள்
- வழிபாட்டு குழு
- அன்பிய ஒருங்கிணையம்
- சபை சங்க இயக்க ஒருங்கிணையம்
- பங்குபேரவை
- நிதிக்குழு
- அடித்தள முழுவளச்சி சங்கம்
- தணிக்கைக்குழு
- சிறு சேமிப்புக்குழு
- அருள்வாழ்வுக்குழு
- கல்விக்குழு
- கலை & ஊடகங்கள் குழு
- சமூகநீதிக்குழு
- நலவாழ்வுக்குழு
- சட்டக்குழு
- கட்டிடக்குழு
கொண்டாட்டங்கள்
[தொகு]பொங்கல் திருநாள்
[தொகு]தமிழர் திருநாளான பொங்கலை கிறித்தவ தொனியில் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வது இவ்வாலயத்தின் சிறப்பு. கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் விதமாக இத்திருநாள் ஆலயத்திற்குள் திருப்பலியுடன் தொடங்கப்பட்டு அதன் பின்பு ஆலய வளாகத்தில் குழுமமாக சேர்ந்து பொங்கலிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். பொங்கலின் முடிவில் பெண்களின் குலவையுடன், கும்மியடித்து நடனமாடுவது வழக்கம்.
பங்குக் குடும்ப விழா
[தொகு]கிறிஸ்து பிறப்பு மரவிழா
[தொகு]பணியாற்றிய அருட்பணியாளர்கள்
[தொகு]கோணங்காடு பங்கின் கிளைப்பங்காக இருந்த பொழுது பணியாற்றிய பங்கு அருள்பணியாளர்கள் [4]
வ எண் | பணிபுரிந்த காலம் | பணியாளர் பெயர் |
---|---|---|
01 | 1964 – 1968 | அருள்பணி. வெனான்சியூஸ் M. பெர்னாண்டோ |
02 | 1968 – 1974 | அருள்பணி. A. மரியதாசன் |
03 | 1974 – 1977 | அருள்பணி. A. பீட்டர் |
04 | 1977 – 1979 | அருள்பணி. J. இன்னோசென்ட் |
05 | 1979 – 1982 | அருள்பணி. R. ஆன்றனி |
06 | 1982 – 1985 | அருள்பணி. S. அருளப்பன் |
07 | 1985 – 1987 | அருள்பணி. M.L. அருள்சாமி |
08 | 1987 – 1988 | அருள்பணி. P. யூஜின் |
09 | 1988 – 1989 | அருள்பணி. S. வின்சென்ட் ராஜ் |
10 | 1989 – 1994 | அருள்பணி. M. பத்றோஸ் |
11 | 1994 – 1999 | அருள்பணி. A. யூஜின் குழந்தை |
12 | 1999 – 2003 | அருள்பணி. M. ஜாண் அகஸ்டஸ் |
13 | 2003 – 2008 | அருள்பணி. S. ஜெயப்பிரகாஷ் |
தாய் பங்காக உயர்த்தப்பட்ட பின் பணியாற்றிய பங்கு அருள்பணியாளர்கள்
வ எண் | பணிபுரிந்த காலம் | பணியாளர் பெயர் |
---|---|---|
01 | 2007 – 2013 | அருள்பணி. S. மரியதாசன் |
02 | 2013 – 2018 | அருள்பணி. V. ஆன்றூஸ் |
03 | 2018- 2020 | அருள்பணி. ஆ. ஜோக்கின்ஸ் |
04 | 2020 - | அருள்பணி. க. சுனில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kuzhithurai Diocese Parishes". பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கோணங்காடு ஆலய வரலாறு". Archived from the original on 2015-07-21. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "தூய பாத்திமா அன்னை ஆலய வரலாறு". Archived from the original on 2016-09-17. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "தூய பாத்திமா அன்னை அருட்பணியாளர்கள்". Archived from the original on 2016-09-17. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)