உள்ளடக்கத்துக்குச் செல்

குலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கல் விழாவில் குலவையிடும் பெண்கள்

குலவை என்பது தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி ஆகும். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்படும். கைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் "உலுலுலுலுலுலு..." என்ற இழுவல் ஓசை குலவை ஒலி உண்டாக்கப்படும். நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.

குலவை போடும் முறை

[தொகு]

உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைக்கும் போது வாயின் மேற்பக்கமாக உள்ளங்கையை வளைத்துப்பிடித்திருப்பர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை ஆகும். [1]

1) குலவை ஒலி இயற்கையாக வெளிவருவதைவிட வளைத்துப்பிடித்திருக்கும் கையில் மோதி எதிரொலித்து மேலும் அதிகமாக உரத்தொலிக்கும். (Eco)

2) கையை வளைத்துப்பிடிப்பதன் மூலம் தான் குலவையிட ஆயத்தமாக (Symbol) இருப்பதாக பிறருக்கு உணர்த்துதல்.

3) கையைவைத்து வாயை மறைப்பதன் மூலம் குலவையிடும்போது முகத்தில் ஏற்படும் அங்க அசைவுகளின் விகாரத்தை பிறர் பார்க்காமலிருக்கச் செய்தல்.

சங்க இலக்கியத்தில் குரவை

[தொகு]

"...........குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனியதேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்"

(புறம் - 129)

"வியலறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்"

(அகம் - 232)

"வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே"

(நற்றிணை - 276)

"கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர ..."

(திருமுறுகாற்றுப்படை - 197)

"நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை"

(மலைபடுகடாம் - 322)

"முழங்குக் குரவையிரவிற் கண்டேகுக"

(திருக்கோவையார்)

"பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப
ஒருசார், விழவுநின்ற வியலாங்கண்"

(மதுரைக்காஞ்சி - 97,98)

வெளியிணைப்பு

[தொகு]

குலவை ஒலி - காணொளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. மட்டக்களப்பு குரவைக்கூத்து - பழமையும் புதுமையும். ஆராய்சி இதழ், ஜீலை 1976, இதழ் 3 , மலர் 7, பக்கம் 157
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலவை&oldid=3727035" இலிருந்து மீள்விக்கப்பட்டது