பண்பாட்டு வானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பாட்டு வானியல் அல்லது கலாச்சார வானியல் (cultural astronomy) என்பது தற்போதைய அல்லது பண்டைய சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் வானியல் அமைப்புகள்பற்றி அறியப்படுகிற பலதுறைகளின் தொகுப்பு ஆகும்.[1] .

தொகுப்பில் உள்ள துறைகள்[தொகு]

  • வானியல் பயன்பாடு பற்றிய ஆய்வு மற்றும் பண்டைய கலாச்சார நாகரீகங்களில் அதன் பங்கு ஆகியவற்றைப் படிக்கும் துறையான தொல்வானியல் துறை,
  • வானியல் பயன்பாடு பற்றிய ஆய்வு மற்றும் சமகாலத்தைய இனக்குழுக்களில் அதன் பங்கு ஆகியவற்றை ஆய்வுசெய்கின்ற துறையான இனக்குழு வானியல்,
  • வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள வானியல் தரவுகளை பகுப்பாய்வு செய்கின்ற துறையான வரலாற்று வானியல்,
  • மனிதனுடைய அறிவில் வானியல் பற்றிய தேடல் தொடங்கி வளர்ந்த விதத்தை புரிந்து கொள்வதும் ஆய்வு செய்கின்றதுமான துறையான வானியலின் வரலாறு ,
  • வானியலின் வேர்களைப் புரிந்து கொள்வதும் வானியல் மற்றும் சோதிடவியல் துறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முயல்கின்ற துறையான வான் குறியியல் அல்லது சோதிடவியல்,

போன்ற அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது பண்பாட்டு வானியல் ஆகும்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jarita Holbrook, Johnson O. Urama and R. Thebe Medupe (2008). "African Cultural Astronomy". ASTROPHYSICS AND SPACE SCIENCE PROCEEDINGS. doi:10.1007/978-1-4020-6639-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_வானியல்&oldid=2746964" இலிருந்து மீள்விக்கப்பட்டது