வரலாற்று வானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாற்று வானியல் ( Historical astronomy ) என்பது வானியல் தரவுகளின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற அறிவியல் துறையாகும். வானியல் வரலாற்றுத் தன்மை தொடர்புடைய துறைகளில் ஆர்வத்தை அதிகரிப்பதே வரலாற்று வானியல் பிரிவு இருப்பதன் நோக்கம் என்று 1899 இல் நிறுவப்பட்ட அமெரிக்க வானியல் கழகம் தெரிவிக்கிறது. வானியலின் வரலாற்றையும் நாம் வரலாற்று வானியலில் சேர்த்துக் கொள்வதால், தொல் வானியல் தொடங்கி எவையெல்லாம் அறியப்பட்டன என்றும் அத்தகைய வரலாற்றுப் பதிவுகளை தற்கால நவீன வானியற்பியல் சிக்கல்களுக்கு தீர்வு காணப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது[1]. பண்டைய மற்றும் வரலாற்று கண்காணிப்புப் பதிவுகள் மூலம் நீண்ட கால வானிகழ்வு போக்குகளான கிரகண வடிவங்கள் மற்றும் விண்மீன் மேகங்களின் திசைவேகம் ஆகியவற்றை அறிந்து தெளிவடைய முடிகிறது[2]. மாறாக, நன்கு அறியப்பட்ட மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று வானியல் ஆவணங்களைப் பயன்படுத்துவதால் இயற்கை நிகழ்வுகளின் செயல்பாட்டை கணிணி மாதிரிகளின் செயல்பாட்டோடு மதிப்பிட்டு சரிபார்க்கவும் அறியப்படாத நிகழ்வுகளின் நிகழ்வு தேதியைக் கணக்கிடவும் இயல்கிறது.

உதாரணங்கள்[தொகு]

• வரலாற்று வானியல் பதிவு ஆய்வின் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணமாக நண்டு நெபுலா தொடர்பான ஆய்வைக் குறிப்பிடலாம். சூலை 1054 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட SN 1054 மீவிண்மீன் வெடிப்புச் சிதறலின் எச்சமே நண்டு நெபுலா என்று அறியப்பட்டது. சமகாலத்திய சீனாவில் இருந்த சங்வம்சத்தில் ஒரு வரலாற்று வானியல் பதிவு எழுதப்பட்டுள்ளது. இப்பதிவில் வானத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வு என இந்நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நிகழ்வை ஜப்பானிய மற்றும் அராபிய வானியல் அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான விண்வெளி அறிஞர்கள் இப்பதிவின் அடைப்படையில் அந்நிகழ்வை நண்டு நெபுலாவின் உருவாக்கம் என்று தொடர்புபடுத்தி காண்கின்றனர்.

• இரண்டாவதாக, வானியல் அறிஞர் எட்மண்ட் ஹாலி வ்ரலாற்று வானியல் துறையில் ஈடுபட்டு தோராயமாக 76 ஆண்டுகளில் மூன்று வால்விண்மீன்கள் தோன்றியதாகக் குறிப்பிட்டார். உண்மையில் அவை மூன்றல்ல ஒரே வால்விண்மீன் ஆகும்.

• அதே போல குறுங்கோள் புளூட்டோ கண்டறியப்பட்டு 1915 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புகைப்படமும் எடுக்கப்பட்டது. ஆனாலும் 1930 ஆம் ஆண்டு வரை அது அங்கீகரிக்கப்படவில்லை.

• கதிர் வீச்சலை வீசும் போலி விண்மீன்கள் எனப்படும் குவாசர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் புகைப்படம் எடுக்கப்பட்டாலும் 1960 வரை அவை விண்வெளியில் இருக்கும் மாறுபட்ட பொருள்கள் என்பது அறியப்படவே இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்று_வானியல்&oldid=2746963" இருந்து மீள்விக்கப்பட்டது