ரேடிசன் புளு உணவகம் சென்னை

ஆள்கூறுகள்: 12°59′40″N 80°11′15″E / 12.99437°N 80.187551°E / 12.99437; 80.187551
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடிசன் புளூ உணவகம் சென்னை
Radisson Blu Hotel GRT Chennai
Map
விடுதி சங்கிலிCarlson Rezidor Hotel Group
பொதுவான தகவல்கள்
நகரம்531, 45வது தேசிய நெடுஞ்சாலை, புனித தோமையார் மலை
சென்னை, தமிழ்நாடு
ஆள்கூற்று12°59′40″N 80°11′15″E / 12.99437°N 80.187551°E / 12.99437; 80.187551
திறப்பு1 March 1999
உரிமையாளர்ஜிஆர்டி
மேலாண்மைRadisson BLU
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு2
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை101
தொகுப்புகளின் எண்ணிக்கை7
உணவகங்களின் எண்ணிக்கை3
தரிப்பிடம்Yes
வலைதளம்
Radisson Blu

ரேடிசன் புளு (Radisson Blue) என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும்.[1] சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

மாக்னூர் ஹாஸ்பிடலிட்டி லிமிடெட் எனும் நிறுவனத்தினால் இந்த உணவகம் கட்டப்பட்டது. இதன் 75 சதவீத பங்கீடு, எம் ஏ சிதம்பரம் குழுவிடம் உள்ளது. 1999 மார்ச்சு மாதக் கணக்கின்படி, இந்த பங்கீட்டின் மதிப்பு 340 மில்லியன் ரூபாய் ஆகும். இதை ஜி.ஆர். தங்க மாளிகை எனும் நிறுவனம் 2001ஆம் ஆண்டில் வாங்கியது. பின்னர், இதன் பெயர் ‘ரேடிசன் ஜிஆர்டி’ என்று மாற்றம் செய்யப்பட்டது.

அமைவிடம்[தொகு]

கோடம்பாக்கத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், கிண்டி ரேஸ் கோர்ஸ், தி. நகர் ஆகியவற்றில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் ரேடிசன் புளூ அமைந்துள்ளது. இது சிட்கோ தொழிற்பகுதிக்கும், சென்னை ரேஸ் கிளப்பிற்கும் மிக அருகில் அமைந்துள்ளது.[2] சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவிலும், சென்னை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 19 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

உணவகம்[தொகு]

இந்த ஹோட்டலில் 19 வணிக வகை அறைகள், 24 கிளப் அறைகள், 51 டீலக்ஸ் அறைகள் உட்பட 101 அறைகள் உள்ளன. தங்கியிருக்கும் இடம், உலாவும் இடம், தோட்டப் பார்வைக்கான இடம், நீச்சல் குளம் என அனைத்து இடங்களிலும் உணவகங்கள் உள்ளன. ஹோட்டல் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலுள்ள இடத்தையும் சேர்த்து 30 அறைகள் அதிகமாக கட்டலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.[3] இருப்பினும், 2010 ஆம் ஆண்டு, அதிகமாக 70 அறைகள், 150 மக்கள் உணவருந்தும் வகையிலான உணவகம் மற்றும் ஸ்பா போன்றவை அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. எக்ஸ்பீடியா இன்சைடர்ஸ் செலக்ட் 2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல்களின் வரிசையில் ரேடிசன் ஹோட்டலும் ஒன்று.[4]

சென்னையிலுள்ள ஹோட்டலைத் தவிர பல நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் ரேடிசன் புளு உணவகங்கள் அமைந்துள்ளன.[5] இவை தவிர இந்தியாவிலும், பிற நாடுகளிலும் புதிய உணவகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.[6]

விருதுகள்[தொகு]

செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு, இந்திய சமையற்கலை கூட்டமைப்பின் சார்பில் (IFCA) சென்னையில் நடைபெற்ற ‘சமையற்கலை சவால் மற்றும் கண்காட்சி – 2008’ இன் சிறந்த பங்கேற்பாளருக்கான ஹோட்டல் விருதினைப் பெற்றது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Category : 5 Star". List of Approved Hotels as of : 06/01/2013. Archived from the original on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 6 Jan 2013. Ministry of Tourism, Government of India. 2013 {{cite web}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |accessdate= at position 6 (help); no-break space character in |publisher= at position 30 (help); no-break space character in |title= at position 9 (help)
  2. "Radisson Blu GRT Hotel Chennai". Cleartrip.com.
  3. Venkatraman, Hemamalini; Nandini Sivakumar (26 October 2009). "Radisson to add new 162-room hotel in Chennai". The Economic Times (Chennai: The Times Group). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |accessdate= at position 7 (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  4. "Radisson GRT gets Expedia recognition". The Hindu (Chennai: The Hindu). 11 June 2010. பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |accessdate= at position 7 (help)
  5. "Radisson Hotels in India". Radissonblu.com.
  6. "Upcoming New Hotels". Radissonblu.com.
  7. "Asiana Hotel bags culinary award". Business Line (Chennai: The Hindu). 27 September 2008. பார்க்கப்பட்ட நாள் 14 Apr 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |accessdate= at position 7 (help); no-break space character in |publisher= at position 14 (help)

வெளி இணைப்புகள்[தொகு]