டெல்டா கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெல்டா கதிர் (delta ray - δ) என்பது நிறைகூடியதும் மின்னூட்டம் கொண்டதுமான ஆல்ஃபா கதிர்கள் அல்லது அதிக ஆற்றலுள்ள இலத்திரன்கள் ஓர் ஊடகம் வழியாகப் பயணிக்கும் போது, அவைகளின் பாதையில் தோற்றுவிக்கப்படும் துணை இலத்திரன்கள் ஆகும். இதனை முகிலறை போன்ற கருவிகளின் துணையுடன் தெளிவாகக் காணமுடியும். இத்துணை இலத்திரன்கள் போதிய ஆற்றலுடன் இருக்குமானால் அவைகளும் வேறு துணை இலத்திரன்களைத் தோற்றுவிக்கலாம்.[1] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட துணை இலத்திரன்கள் டெல்டா கதிர்கள் எனப்படுகின்றன. இப்பெயரை ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதலில் கையாண்டார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_கதிர்&oldid=1766008" இலிருந்து மீள்விக்கப்பட்டது