உள்ளடக்கத்துக்குச் செல்

சோடவரம், விசாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்றாக இருந்தது.[1]

அமைவிடம்

[தொகு]

சோடாவரம் என்பது நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[2] இதன் அஞ்சலக குறியீட்டு எண் 531036 ஆகும்.[3] விசாகப்பட்டினத்தில் இருந்து, இந்த இடத்தை அடைய இம்மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் நீளம் ஏறத்தாழ 50 கி.மீட்டர்கள் ஆகும். இதன் நிலப்பகுதியானது, கடல்மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய நாற்பது மீட்டர் உயரத்தில் உள்ளது. நிலவியல் வரைப்படத்தின் படி, வடக்கில் 17° 49′ முதல் 59.88″ வரையிலும், கிழக்கில் 82° முதல் 57′ 0″ பெற்றுள்ளது.[4] போக்குவரத்துச் சட்டப்படித் தொடங்கக் குறியீடாக, AP என்ற ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப் படுகின்றன.

வரலாறு

[தொகு]

இந்த ஊரின் உண்மையான பெயர் சோழவரம். சோழர் பரம்பரை ஆனது கி.மு. 300 முதல் கி.பி. 1279 வரை, இந்த நிலப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில், தமிழ்நாட்டையும், கடலோர ஆந்திராவின் ஆட்சி செய்தவர்கள், ஒரிசாவை ஆட்சி செய்த கஜபதி இராச்சியம் செல்லும் வழியில், சோலாவரத்தை ஒரு எல்லையாகக் கொண்டு இருந்தனர். 1941 ஆம் ஆண்டில், சோடாவரம் 8,379 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[5]

மக்கள் வாழ்க்கைக்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மொத்த மக்கள் தொகை 20,251 ஆகும், இதில் 9,868 ஆண்களும், 10,383 பெண்களும் அடங்கி உள்ளனர். இம்மாவட்டத்தின் பாலின விகிதம் 1,052 ஆகும். ஆனால் இம்மாநிலத்தின் மாநில சராசரி 993 நபர்கள் ஆவர். 2,035 குழந்தைகள், 0-6 வயது உடையவர்கள் ஆக இருந்தனர். சோடாவாரத்தின் மக்கள் தொகையில் 10.05% குழந்தை பாலின விகிதத்தைப் பெற்றிருக்கிறது. இக்குழந்தைகளின் ஆண் பெண் விகிதமானது, சுமார் 951 ஆகும். ஆனால், மாநிலத்தின் சராசரி குழந்தைகள் பாலின கணக்கீடு, 939 ஆகும். சோடாவரம் நகரத்தில் கல்வியறிவு விகிதம் சுமார் 77.49% ஆகும். இது இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த கல்வியறிவை விட அதிகம். இம்மாநிலத்தின் மொத்த கல்வியறிவு 67.02% ஆகும். இந்த ஊரின் மக்கள் அதிகம், அவர்களது தாய் மொழியான, தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். பிற மதத்தினர் வாழ்ந்தாலும், அதிக அளவில் இந்துக்கள் என, இந்திய அரசு குறிப்பிடுபவர் அதிகம் வாழ்கின்றனர். சிறிய, அழகிய கணபதி கோவில் ஒன்று உள்ளது.

கல்வி

[தொகு]

தொடக்கக்கல்வி, இடைநிலைக் கல்வி என இரு நிலைக் கல்வியும், தனியார் பள்ளிகளின் உதவியுடன் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.[6][7] ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் பாடங்கள் நடத்தப் படுகின்றன. மாநில அரசின் கண்காணிப்பில் நடத்தப்படும், ஒரே ஒரு தொழிற் கல்விக் கூடம் பாலிடெக்னிக் சோடவரத்தில் உள்ளது.[8] இந்த கல்வி நிறுவனம் தற்காலிக, சோடாவரம், அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிட ஒருங்கிணைப்பில் உள்ளது. மேலும, அனைத்து ஊழியர்களும், பிற துறைகளில் இருந்து, அரசின் சார்பாகப் பணிபுரிகின்றனர். இங்கு இருவித பாடப்பரிவுகள் நடத்தப்படுகின்றன. ஒன்று DECE என்னும் கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பும், மற்றொன்று DCME இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பும் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும், வருடா வருடம் அறுபது மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இந்திய அரசு பணி செய்யும் அதிகாரியின் (IAS) நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த தொழிற்கல்விக் கூடம் இயங்குகிறது. தற்போதுள்ள இந்திய அரசுப் பணி அதிகாரியின் பெயர், பாபு அகமது. இவர் தொழிற் கல்வியின் இயக்குனர் ஆவார். இக்கல்வியகத்தின் குறியீட்டு எண் Polycet Code 635 என்பதாகும்.

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 21. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சோடவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[9]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. அவற்றை கீழே காணவும். ஊர்ப் பெயர்களை வரிசைப்படுத்தவில்லை.

  1. லட்சுமிபுரம்
  2. தாமுனாபல்லி
  3. மைசர்லபாலம்
  4. கண்டிபல்லி
  5. கவரவரம்
  6. லக்கவரம்
  7. அட்டூர்
  8. சீமனாபள்ளி
  9. ஜூத்தாடா
  10. அன்னவரம்
  11. வெங்கய்யகாரிபேட்டை
  12. நரசய்யபேட்டை
  13. கவுரிபட்டினம்
  14. ஸ்ரீராம்பட்டினம்
  15. அங்குபாலம்
  16. சோடவரம்
  17. கஜபதிநகரம்
  18. அம்பேருபாலம்
  19. ராயப்புராஜுபேட்டை
  20. வெங்கன்னபாலம்
  21. கோவாடா
  22. பகீர் சாகிப்பேட்டை
  23. பென்னவோலு
  24. ஜன்னவரம்
  25. திம்மன்னபாலம்
  26. சாகிபள்ளி
  27. போகாபுரம்
  28. முத்துர்த்தி
  29. எம். கொத்தபள்ளி
  30. கந்தவரம்
  31. துட்டுபாலம்

சான்றுகள்

[தொகு]
  1. "Mandal wise list of villages in Visakhapatnam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
  2. Falling Rain Genomics.Chodavaram
  3. https://pincode.net.in/ANDHRA_PRADESH/VISAKHAPATNAM/C/CHODAVARAM
  4. https://tools.wmflabs.org/geohack/geohack.php?pagename=Chodavaram,_Visakhapatnam_district&params=17.8333_N_82.9500_E_type:city_region:IN-AP
  5. கொலம்பியா-லிப்பின்காட் வர்த்தமானி. (நியூயார்க்: கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ், 1952) ப. 403
  6. "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2019.
  7. "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2019.
  8. https://govtpolychodavaram.ac.in/
  9. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.