சான்சே இல்ல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"சான்சே இல்ல"
படிமம்:Anirudh Chancey illa.jpg
அனிருத் ரவிச்சந்திரன் இன் இசையில்
வெளியீடு1 ஆகஸ்ட் 2014
வடிவம்எண்முறை பதிவிறக்கம்
நீளம்3:43
எழுத்தாளர்(கள்)விக்னேஷ் சிவன்

சான்சே இல்ல அனிருத் ரவிச்சந்திரன் என்னும் இசையமைப்பாளர் நடித்து வெளியிட்ட இசை ஆல்பமாகும். இந்த ஆல்பம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரைப் புகழும் வண்ணம் வெளியிடப்பட்டது.

பின்னணி[தொகு]

சென்னை மாநகரம் ஆங்கிலேயர் காலம் முதல் முக்கிய வர்த்தக மையமாகவும் கலாச்சார மையமாகவும் விளங்குகிறது. மற்ற எந்த ஊருடனும் ஒப்பிட்டாலும் சென்னை போன்ற ஒரு நகரம் இருக்க வாய்ப்பே இல்லை (சான்சே இல்ல) என்னும் அர்த்தத்தில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலைத் தமிழ் திரையுலக இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் என்னும் இயக்குனர் இந்தப் பாடலை எழுதி இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவாளர் வில்லியம் சி.ஜார்ஜ்.[1][2].

வெளியீடு[தொகு]

"சான்சே இல்ல" பாடல் யூ டியூப் இணையதளத்தில் 1 ஆகஸ்ட், 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சே_இல்ல&oldid=3992257" இலிருந்து மீள்விக்கப்பட்டது