செட்டிக்குளம் படுகொலைகள்
செட்டிக்குளம் படுகொலைகள் | |
---|---|
இலங்கையில் அமைவிடம் | |
இடம் | செட்டிக்குளம், வட மாகாணம் |
நாள் | டிசம்பர் 2, 1984 (+8 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | தமிழ் பொது மக்கள் |
இறப்பு(கள்) | 52 |
காயமடைந்தோர் | தெரியாது |
தாக்கியோர் | இலங்கை இராணுவம் |
செட்டிக்குளம் படுகொலைகள் (Cheddikulam massacre) என்பது மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள செட்டிக்குளம் எனும் கிராமத்தில் தமிழ்ப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையினைக் குறிக்கும். இது இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை ஆயுதப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் படுகொலைகளில் ஒன்றாகும்.[1]
படுகொலைகள்
[தொகு]1984 டிசம்பர் 2 அன்று செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதிகாலை 05:30 மணியளவில் செட்டிக்குளம் பகுதியை இராணுவம் சுற்றி வளைத்தது. கிராமத்தின் பெரும்பான்மையானோர் இன்னமும் உறக்கத்தில் இருந்தனர். இராணுவத்தினர் வீடுகளில் புகுந்து ஆண்கள் அனைவரையும் 'விசாரணை'க்கெனக் கூட்டிச் சென்றனர்.[2]
இவ்வாறாக 52 ஆண்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். 52 பேரும் அருகில் உள்ள மதவாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கத்திகளினால் குத்திக் கொல்லப்பட்டு வாகனங்களால் மிதிக்கப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.[1]
நேரடிச் சான்றுகள்
[தொகு]செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் டி. யேசுதாசன் என்பவர் சாட்சியமளிக்கையில்,[1]
இந்நிகழ்வுக்குப் பின்னர் உள்ளூர் மக்கள் வன்னி, மடு, மற்றும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். கொல்லப்பட்ட 52 பேரில் எனது கடைசித் தம்பி, மச்சான், மற்றும் எனது இரண்டு உறவினர்களும் உள்ளனர்.
மயில்வாகனம் என்ற வேறொருவர் சாட்சியமளிக்கையில்,[1]
அந்த நாளன்று பலர் காட்டுக்குள் ஓடித் தப்பினர். எனது வீடு இலங்கைத் தரைப்படையால் முற்றாகச் சேதமாக்கப்பட்டது.
குறிப்பு
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Massacres of Tamils(1956-2008). Chennai: Manitham Publications. 2009. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-909737-0-0.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement". Asia Watch Committee. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2013.