உள்ளடக்கத்துக்குச் செல்

கால்நடைத் தீவன ஊழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்நடைத் தீவன ஊழல்

கால்நடைத் தீவன ஊழல் (English:Fodder Scam) என்பது பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் ஆகும். பீகாரில் 1990-ஆம் ஆண்டு முதல்வராகப் பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் கால்நடைத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து உரிய விசாரணை கோரி வழக்குரைஞர்கள் சிலர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலகம் (சிபிஐ) விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் சுமார் 13 ஆண்டுகள் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்படுவதுடன், அவரால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. [1]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடைத்_தீவன_ஊழல்&oldid=2028166" இலிருந்து மீள்விக்கப்பட்டது