விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/புதிய கட்புலத் தொகுப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பான்மையான விக்கிப்பீடியா பக்கங்களைத் தொகுப்பது எளிதான செயலே. இங்கு விக்கிமீடியா நிறுவனத்தால் புதியதாக உருவாக்கப்பட்டு பீட்டா நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ள கட்புலத் தொகுப்பானைக் (VisualEditor)கொண்டு பக்கங்களைத் தொகுப்பதெப்படி எனக் கூறப்பட்டுள்ளது. பழைய உரைத் தொகுப்பானைப் பயன்படுத்த விரும்புவோர் விக்கிப்பீடியா:தொகுத்தல் பக்கம் காணவும்.

கட்புலத் தொகுப்பானைப் பயன்படுத்த துவக்குவது எப்படி[தொகு]


ஒரு பக்கத்தை கட்புலத் தொகுப்பான் கொண்டு தொகுக்க, குறிப்பிட்டப் பக்கத்தின் மேலே காணும் "தொகு" என்ற கீற்றைச் சொடுக்கவும். அந்தப் பக்கம் சில நொடிகள் கழித்து தொகுப்பதற்கேற்ற வகையில் திறக்கும்; பெரிய பக்கமாக இருந்தால் கூடுதல் நேரமெடுக்கும்.

மாறாக "மூலத்தை தொகு" கீற்றைச் சொடுக்கினால், வழமையான விக்கியுரைத் தொகுப்பானைக் கொண்டு தொகுப்பதற்காக தொகுத்தல் பெட்டி திறக்கும்; கட்புலத் தொகுப்பான் திறக்காது.


இதேபோல ஒவ்வொரு பிரிவுத் தலைப்பின் வலப்புறத்தில் காணப்படும் "தொகு " இணைப்பைக் கொண்டும் கட்புலத் தொகுப்பானைத் துவக்கலாம். பக்கம் மீண்டும் திறக்கும்போது அந்தக் குறிப்பிட்ட பிரிவிற்குச் சென்றாலும் முழு பக்கத்தையும் தொகுக்க முடியும்.

நீங்கள் ஒரு பிரிவை மட்டும் தொகுக்க விரும்பினால் மேலேயுள்ள கீற்றைக் கொண்டு துவக்குவதை விட அந்தப் பிரிவை அடுத்துள்ள இணைப்பைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும். இவ்வாறு செய்தால், தொகுத்தல் சுருக்கத்தில் அந்தப் பிரிவின் தலைப்பு தானியக்கமாக இடம் பெறும். இது மற்ற பயனர்களுக்கு நீங்கள் கட்டுரையின் எந்தப் பிரிவில் தொகுத்தீர்கள் என்பதை அறியப் பயன்படும்.



துவக்கம்: கட்புலத் தொகுப்பான் கருவிப்பட்டை[தொகு]


ஆங்கில விக்கியில் கட்புலத் தொகுப்பான் கருவிப்பட்டை
கட்புலத் தொகுப்பான் வழியே தொகுக்க முற்படுகையில் கட்புலத் தொகுப்பான் கருவிப்பட்டை திரையின் மேற்புறத்தில் தோன்றும். இதில் சில வழமையான படவுருக்கள் உள்ளன:

நீங்கள் செய்த மாற்றங்களுக்கான செயல்தவிர் மற்றும் மீண்டும் செய் அம்புகள். (நீங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை எனில் ஒன்று அல்லது இரண்டு அம்புகளுமே வெளிர்கருமை நிறத் தோற்றம் பெற்றிருக்கும்.)

பத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்விழும் விருப்பத்தேர்வுகள், உரையின் தலைப்பு நிலையை மாற்ற உதவுகின்றன. சீர்தர பத்தித் தலைப்புகள் படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "தலைப்பு" நிலையில் உள்ளன; இது விக்கியுரைத் தொகுப்பானின் "நிலை2"க்கு இணையானது.

இப்போதிருக்கும் தலைப்புநிலைகளை மாற்றுவதோடு இந்த விருப்பத்தேர்வுகள் மூலம் புதிய தலைப்பை (குறிப்பிட்ட உரையைத் தெரிந்தெடுத்து/எடுப்பாய் ஆக்கி ஒரு தலைப்பு நிலையை தெரிந்தெடுக்கவும்) உருவாக்கவும் தலைப்பிடப்பட்டுள்ள பத்தியை சாதாரண உரையாக (குறிப்பிட்டத் தலைப்பினுள் எங்காவது சொடுக்கி பத்தி என்பதைத் தெரிவு செய்யவும்) மாற்றவும் இயலும்.


வடிவமைப்பு: "A" தெரிவுசெய்த உரையை தடிமனாக்குகிறது, "A" சாய்வெழுத்தாக்குகிறது. சங்கிலி இணைப்பை ஆக்கும் கருவியாகும். நான்காவது படவுரு ("வடிவமைத்தலை வெறுமையாக்கு") நீங்கள் தெரிவு செய்த உள்ளடக்கத்திலிருந்து தற்போதுள்ள வடிவமைப்பை நீக்குகிறது.

பட்டியல்களும் & உரை தள்ளல்களும்: முதலிரு படவுருக்களும் முறையே எண்ணிட்ட அல்லது புள்ளியிட்ட பட்டியல்களை உருவாக்குகின்றன. கடைசி இரு படவுருக்கள் தெரிந்தெடுத்த உரை தள்ளியிடப்படுவதை கூட்டவும் குறைக்கவும் பயனாகின்றன.

ஊடக இணைப்பு, மேற்சான்றுகள் & மாற்றிடச் சேர்க்கைகள்: ஒவ்வொரு படவுருவும் தனக்கானத் தனி உரையாடற் பெட்டியைத் திறக்கின்றன:
  • "ஊடகம்" படவுரு (மலைகளின் படிமம்) படிமங்களையும் பிற ஊடகங்களையும் இணைக்க ஊடக உரையாடற் பெட்டியைத் திறக்கின்றன.

  • "மேற்கோள்" படவுரு (நூற்குறியின் படிமம்) மேற்கோள்களை தொகுக்கும் உரையாடற் பெட்டியைத் திறக்கின்றன.

  • "உசாத்துணைகள் பட்டியல்" படவுரு (மூன்று நூல்கள் படிமம்) உசாத்துணைகளைக் காட்டிட உரையாடற் பெட்டியைத் திறக்கின்றன.

  • "மாற்றிடச் சேர்க்கை" படவுரு ( புதிர் அங்கத்தின் படிமம்) வார்ப்புருக்களைத் தொகுக்கும் உரையாடற் பெட்டியைத் திறக்கின்றன.

பக்க அமைப்புக்கள் தற்போது பகுப்புகளை தொகுக்க உதவுகின்றன--நீங்கள் தொகுக்கும் பக்கம் எந்தெந்த பகுப்புகளில் பட்டியலிடப்படுகிறது என்பதையும் எப்படிப் பட்டியலிடப்படுகிறது என்பதையும் தொகுக்கலாம். காட்டாக, "ஜான் இசுமித்து" என்பதற்கு மாற்றாக "இசுமித்து, ஜான்" எனப் பட்டியலிடச் செய்யலாம்.அந்தப் பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற மொழி இணைப்புக்களைக் காண முடியும்; தொகுக்க முடியாது.

உங்கள் மாற்றங்களை சேமிக்காமல் திரும்பு அல்லது பக்கத்தைச் சேமி. சேமிக்காமல் திரும்பு ("Cancel) சொடுக்கினால் மீண்டும் ஒருமுறை உங்கள் செயலை உறுதிப் படுத்துமாறு வேண்டப்படுவீர்கள். "பக்கத்தைச் சேமி" சொடுக்கினால் உரையாடற் பெட்டி ஒன்று தோன்றி அதில் தொகுத்தல் சுருக்கம் போன்றவற்றை நிரப்ப வேண்டப்படுவீர்கள்.


விசைப்பலகை சுருக்குவழிகள்[தொகு]

விசைப்பலகை சுருக்குவழிகள் வடிவமைப்பை தொகுக்கும்போது கருவிப்பட்டையின் படவுருக்களை சொடுக்கிக் கொண்டிருப்பதை விட விரைவாக செயல்பட வழிசெய்கின்றன. பொதுவான சுருக்குவழிகள், மற்ற தொகுத்தல் மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் சுருக்குவழிகள் கட்புலத் தொகுப்பானிலும் இயங்குகின்றன. முழுமையான பட்டியலை இங்கு காணலாம். சில வழைமையான சுருக்குவழிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

விண்டோசு சுருக்குவழி செயல் குறியீடு மாக் சுருக்குவழி விண்டோசு சுருக்குவழி செயல் குறியீடு மாக் சுருக்குவழி


Ctrl+B தடித்தெழுத்து ⌘ Cmd+B Ctrl+K இணைப்பிடு ⌘ Cmd+K


Ctrl+I சாய்வெழுத்து ⌘ Cmd+I Ctrl+X வெட்டு ⌘ Cmd+X


Ctrl+Z செயல் தவிர் ⌘ Cmd+Z Ctrl+C படியெடு ⌘ Cmd+C


⇧ Shift+Ctrl+Z மீண்டும் செய் ⇧ Shift+⌘ Cmd+Z Ctrl+V ஒட்டு ⌘ Cmd+V