வைரப்பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யர்மலை வைரப்பெருமாள் தமிழ் நாட்டில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் பெரிதும் பேசப்படும் நாட்டார் தெய்வம் ஆவார்.[1] திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டத்தினரிடையே நாட்டுப்புற வழக்கில் அவரது கதை இடம்பெறுகிறது

கதை[தொகு]

சிவனடியார்[தொகு]

இக்கதை தொண்டை நாட்டில் காஞ்சிபுரம் என்ற சிவப்பதியில் முதலியார் இனத்தில் பிறந்த வைரப்பெருமாள் (வைராக்கிய பெருமாள்) என்ற பெயருடைய சிவனடியாரின் கதையாகும்.

குழந்தைப் பேறின்மை[தொகு]

இவர் . பலகாலம் குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் அய்யர்மலை சென்று இறைவனிடம் குழந்தை வரம் கேட்டு, இதற்கு நேர்த்திக் கடனாக தம் தலையை கொய்து கொள்வதாக வேண்டிக்கொண்டதையும், பழுத்த சிவனடியாராக வாழ்ந்து வந்த அவருடைய வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி சோதிக்க எண்ணியதையும், இதன் பலனாக அவர் மனைவி அழகிய குழந்தைக்குத் தாயானதையும் பற்றி கூறுகிறது.

தன் தலையை தானே கொய்து நேர்த்திக் கடன்[தொகு]

தம் வேண்டுதலை முடிக்க எண்ணிய வைரப்பெருமாள் அய்யர்மலை வந்து பதினெட்டாம் படியில் நின்றபடி தம் தலையை தானே வாளால் அறுத்துக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றிய செயல் மக்களிடையே இவரை நாட்டார் தெய்வமாக உயர்த்தி உள்ளது. மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது.

இரத்தினகிரீஸ்வரர் அருள்[தொகு]

மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது சிரசை கொய்து கொண்ட சிவனடியாரின் பக்தியால் உளமகிழ்ந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கினவாம்.

மூன்று வரங்கள்[தொகு]

தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது சிரசை கொய்து கொண்ட சிவனடியாரின் பக்தியால் உளமகிழ்ந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கினவாம். சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார்.

இறைவனின் சித்தமறிந்த வைராக்கிய பெருமாள் இறைவனிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றார்:

  1. இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில் இவருக்கே சூட்டப்படும்.
  2. இறைவனுக்கு காட்டிய கற்பூர ஆரத்தி பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் காட்டப்படுகிறது.
  3. அம்மனுக்கு படைத்த தளிகை இவருக்கே அளிக்கப்படுகிறது.

தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.

[2]== அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் == கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை. ஐவர் மலை, சிவாயமலை, மாணிக்க மலை என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன.

கோயில் அமைப்பு[தொகு]

மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இறைவன் ஒன்பதாவது இரத்தினமாக சுயம்புவாக எழுந்தருளி இருப்பதால் இவருக்கு மலைக்கொழுந்தீஸ்வரர் என்று பெயரும் வழங்கி வருகிறது. காகம் பரவா மலை, நாகம் தீண்டா மலை என்று பல அதிசயங்களால் பெயர் பெற்ற இந்த மலையில் சிவபெருமான் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

பிரார்த்தனை[தொகு]

இந்தக் கோவிலில் வைராக்கியபெருமாள் சன்னதியில் வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணம் கைகூடும், குழந்தைப் பேறு கிடைக்கும் வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.

கோவில் அமைவிடம்[தொகு]

திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது.நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம் அருகிலுள்ள ரயில் நிலையம் குளித்தலை கரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கரூர் 40 கி.மீ.குளித்தலை 8 கி.மீதிருச்சி 44 கி.மீ.மணப்பாறை 40 கி.மீ.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் தல புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரப்பெருமாள்&oldid=3592106" இலிருந்து மீள்விக்கப்பட்டது