பேரானந்த சித்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரானந்த சித்தியார் [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். இதில் 108 விருத்தங்கள் உள்ளன. ஆனந்தம் என்பது உலகியல் மகிழ்ச்சி. பேரானந்தம் என்பது மறைபொருள் பற்றிய உண்மை உணர்வில் தோன்றும் மகிழ்ச்சி. இந்தப் பேரானந்த மகிழ்வை அடையும் வழிகளைக் கூறுவது இந்த நூல்.

  1. திருப்புன்முறுவல்
  2. மௌன முத்திரை
  3. பிடித்த முத்திரை
  4. கன்மக் கழற்றி
  5. மாயைக் கழற்றி
  6. ஆணவக் கழற்றி
  7. போதக் கழற்றி
  8. அருட்கழற்றி
  9. பொருட்கழற்றி
  10. முத்தி கழற்றி வினா மொழி

என்னும் 10 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

இதன் ஆசிரியர் பற்றிச் சில கருத்துக்கள் உள்ளன.

  • சிவானுபூதி செல்வர் செய்தது. [2]
  • முத்தாரம் வித்தியானந்தர் விளம்பிய பேரானந்த சித்தியார். [3]
  • இந்த நூலைக் கண்ணுடைய வள்ளலோ அல்லது அவரது மாணாக்கருள் ஒருவரோ செயதிருக்க வேண்டும் என்பது மு. அருணாசலம் கருத்து.
இதற்காக இவர் கூறும் சான்றுகள்.
சிற்றம்பல நாடிகள் செய்த சாத்திரக் கொத்தில் இதன் முற்பகுதி உள்ளது.
பேரானந்த சித்தியார் கண்ணுடைய வள்ளல் அல்லது அவழது மாணாக்கரின் நூல்கள்
5 அதிகாரங்கள் 'கழற்றி' என உள்ளன் பஞ்சமலக் கழற்றி [4] நூலில் பல தலைப்புகள் 'கழற்றி' என்னும் தலைப்புடன் உள்ளன
முற்பகுதி சிற்றம்பல நாடிகள் [5] செய்த சாத்திரக் கொத்தில் உள்ளது
"எல்லா மதங்களும் போய் உய்ந்தவாறு" "ஒழிவில்லாத்து என்னது எனதாய் இரு" [6]
"தர்க்கம் இறந்து சதுல் இறந்து சார்வும் இறந்து" "பொருளும் மனையும் அற மறந்து போகம் மறந்து புலன் மறந்து" [7]
"உன் நட்பெல்லாம் காக்கை உறவோ போ போ போ கண்டால் நகைப்பேன் காமியமே" [8] சொற்களை மூன்று முறை அடுக்கும் வழக்கம் வள்ளல் பாடிய ஒழிவிலொடுக்கம் நூலில் பல இடங்களில் வருகிறது

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 169. 
  2. திருநாவுகரசர் சிவாமிகள் மடத்து இராமலிங்க சுவாமிகளால் 1905-ல் ஆச்சிடப்பட்ட சிவானந்த சிந்நியார்
  3. இந்த நூலின் காப்புச் செய்யுள்
  4. கண்ணுடைய வள்ளல் பாடிய நூல்
  5. வள்ளலின் மாணாக்கர்
  6. வள்ளல் பாடிய பஞ்சமலக் கழற்றி
  7. வள்ளல் எழுதிய திருக்களிற்றுப்படியார் உரை
  8. பேரானந்த சித்தியார் 40 ஆம் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரானந்த_சித்தியார்&oldid=1489085" இலிருந்து மீள்விக்கப்பட்டது