திருமூழிக்களம்

ஆள்கூறுகள்: 10°11′16.1″N 76°19′37.5″E / 10.187806°N 76.327083°E / 10.187806; 76.327083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமூழிக்குளம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில்
திருமூழிக்குளம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில் is located in கேரளம்
திருமூழிக்குளம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில்
திருமூழிக்குளம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில்
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:10°11′16.1″N 76°19′37.5″E / 10.187806°N 76.327083°E / 10.187806; 76.327083
பெயர்
பெயர்:திருமூழிக்குளம் லட்சுமணப் பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:எர்ணாகுளம்
அமைவு:திருமூழிக்குளம்
ஏற்றம்:31 m (102 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2]

அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது.[3] இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி: மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம்,பூர்ண நதி ஆகியன. விமானம்:சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.[3]

The entrance of the temple

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nammalvar : Poems and Biography". Poetry-chaikhana.com. Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2011-07-04.
  2. Elayavalli, Venkatesh K. "108 Divya Desam: A Virtual Tour". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  3. 3.0 3.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூழிக்களம்&oldid=3826544" இலிருந்து மீள்விக்கப்பட்டது