பேச்சு:மாநிலச் சட்டப் பேரவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டமன்றத்தின் கீழ் அவை சட்டப்பேரவை மேல் சபை சட்ட மேலவை. எப்படி லோக் சபா வை மக்களவை என்று மாற்றினோர்களோ அதைப் போலத்தான் இதற்குப்பின் தமிழ் நாடு சட்டப் பேரவை என்று தனித் தலைப்பில் கட்டுரை வரும். அது மட்டுமில்லாமல் விதான் சபை என்பதற்கு சட்டப் பேரவை என்று வைக்கப்பட்டுள்ளது.--செல்வம் தமிழ் 02:52, 13 மார்ச் 2009 (UTC)

இந்தியாவில் உள்ள சட்டப் பேரவையை மட்டும் சட்டப் பேரவை என்று அழைக்க முடியாது. கனடாவிலும் சட்டப் பேரவை உண்டு. --Natkeeran 02:53, 13 மார்ச் 2009 (UTC)

மாநில சட்டப்பேரவை என்றுதான் வைக்கவேண்டும் இந்தியாவில் சட்டமன்றம் என்றுதான் வைக்கவேண்டும்.--செல்வம் தமிழ் 02:55, 13 மார்ச் 2009 (UTC)

இதற்கு தலைப்பிடும்பொழுது சற்று யோசித்து வைக்கவும் இந்தியா என்று வரும் பொழுது நாடாளுமன்றம் வந்து விடுகின்றது மாநிலங்கள் என்று வரும் பொழுதுதான் சட்டமன்றம்- சட்டப் பேரவை, சட்ட மேலவை என்று வருகின்றது, இந்திய மாநிலங்களின் சட்டமன்றம் என்ற பொதுத் தலைப்பிடலாம் அல்லது மாநிலங்களின் சட்டமன்றம் என்று தலைப்பிடலாம் அதன்பின் பொதுத் தலைப்புடன் வருபவை இக் கட்டுரை இந்திய மாநிலங்களின் சட்டப் பேரவை,அ மாநில சட்டப் பேரவை அதன் பின் இந்திய மாநிலங்களின் சட்ட மேலவை அ மாநில சட்ட மேலவை இப்படி வைத்தால் இக்கட்டுரை சட்டமன்றத்தின் கீழ் வரும் கட்டுரை. --செல்வம் தமிழ் 03:10, 13 மார்ச் 2009 (UTC)

செல்வம், சட்டமன்றம் அல்லது சட்டப்பேரவை இரண்டும் ஒன்றையே குறிக்குமா? எப்படியானாலும் இவை உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். இலங்கையிலும் முன்னர் சட்டமன்றம் (விடுதலைக்கு முன்னர்) என்ற பெயரே இருந்தது. இந்தியா குறித்த சட்டமன்றங்களுக்கு தலைப்பில் இந்தியா என்றும் வரக்கூடியதாகப் பெயர் வைப்பதே நீண்ட காலத்திற்கு நல்லது. ஆங்கில விக்கிப்பீடியாவில் விதன் சபா என்று இந்தி மொழியிலேயே வைத்துவிட்டார்கள். அப்படி தமிழ் விக்கியில் வைக்க முடியாது. குறிப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.--Kanags \பேச்சு 03:46, 13 மார்ச் 2009 (UTC)
இந்திய மாநில சட்டப்பேரவை எனத் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 03:50, 13 மார்ச் 2009 (UTC)