பேச்சு:மெய்நிகர் வலையமைப்பூடான கணினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

virtual - மெய்நிகர்

--மு.மயூரன் 17:13, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

virtual மாயம் என்பதும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இயற்பியலில் (பொளதீகவியலில்) virtual Image என்பதை மாயவிம்பம் என்றவறே இலங்கையில் அழைக்கின்றனர். --Umapathy 17:58, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆங்கில கட்டுரையோடு ஒப்பிட்டு இதனை சரிபார்க்கவும். VNC என்பது ஒரு வரைமுறையே (protocol) தவிர மென்பொருள் அல்ல. VNC வரைமுறைக்கு ஆதரவு வழங்கும் வழங்கிகளும் வாங்கிகளும் ஏராளமாக கிடைக்கின்றன. அவை எல்லாம் திறந்த மூலம் அல்ல.

--மு.மயூரன் 17:16, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இதை ஏறத்தாழ 2 வருடங்களாகப் VNC பாவித்த அநுபவத்தில் ஆங்கில் விக்கிபீடியாவை மேலோட்டமாகப் பார்த்துக் கட்டுரையை எழுதினேன். நானறிந்தவரையில் இலங்கையில் RealVNC ஐத்தான் பெரும்பாலும் பாவிக்கின்றார்கள் சிலர் tight VNC பாவிப்பதை நான் கண்டுள்ளேன் இவ்விரண்டையும் தவிர வேறேந்த VNC மென்பொருளையும் பாவிப்பதை நான் இன்னமும் காணவில்லை. . நீங்கள் பல கணினி தொடர்ப்பான கட்டுரைகளை சிறப்பாக எழுதியுள்ளீர்கள் கட்டுரையில் பிழைகள் இருப்பின் நீங்களே திருத்தி விடுங்கள். VNC சேவர் மற்றும் கிளையண்ட் பல கிடைக்கின்றன அவை எல்லாம் திறந்த மூலம் அல்ல என்பது முற்றிலும் சரியானது. --Umapathy 17:58, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாய என்பது ஏதோ மந்திரஜாலச் சொல் போன்றும் அறிவியல் தன்மை குறைந்தும் காணப்படுகிறது. இந்த கட்டுரை தவிர்த்து இன்னும் பல அறிவியல் சொற்களிலும் வரக்கூடிய virtual என்பதற்கு மெய்நிகர் என்பது மிகவும் பொருத்தமாகப் படுகிறது. அதையே பயன்படுத்தலாமே?--ரவி 19:58, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி மற்றும் மயூரனின் கருத்துக்களுக்கமைவாக மெய்நிகர் வலையமைப்பினூடான கணினி என்றவாறு தலைப்பை வழிமாற்றம் செய்யவா?--Umapathy 09:00, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரையின் உள்ளடக்கத்திலும் மெய்நிகர் வலையமைப்பினூடான கணினி என்று மாற்றுவது தானே பொருத்தம். செய்கிறேன். வேறு கருத்திருந்தால் கூறவும். --சஞ்சீவி சிவகுமார் 08:09, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
தாராளமாக மாற்றலாம் சஞ்சீவி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:21, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]