பேச்சு:இயந்திர மொழிபெயர்ப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனைப் பொறிவழி மொழிபெயர்ப்பு என்றோ பொறிய மொழிபெயர்ப்பு என்றோ தலைப்பிடலாம் என்று நினைக்கின்றேன். பொதுவாகப் பலரும் இயந்திர மொழிபெயர்ப்பு என்றே அழைக்கின்றார்கள். இயந்திர மொழிபெயர்ப்பு என்று பெயரிடலாமா? இயந்திரம் என்பதை யந்த்ர என்னும் சமசுக்கிருதச்சொல் என்று கூறுவாரும் உண்டு. இயந்திரம் என்பது தமிழ் வழியும் இயங்கு, இயல், இயன் என்பதன் அடிப்படையாக "திரம்" என்னும் சொல்லோடு சேர்ந்து இயந்திரம் என்று ஆகும். திரம் = உறுதி (சேர்ந்து இயங்குவது என்றும் பொருள் தரும்). இந்த உரையாடலையும் பார்க்கலாம். என்வே பொதுவாகப் பயன்படும் இயந்திர மொழிபெயர்ப்பு என்பதை முதன்மைப் படுத்தி, பின்னர் மற்ற பெயர்களையும் குறிப்பிடலாம் என்பது என் கருத்து.பயனர்கள் கருத்து நலக வேண்டுகிறேன்.--செல்வா 22:54, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இயந்திர மொழிபெயர்ப்பு எனவே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 23:09, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன். மாற்றிவிட்டேன்.--செல்வா 00:29, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]