4-அமினோயிருபீனைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-அமினோயிருபீனைலமீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்1-பீனைல்பென்சீன்-1,4-டையமீன்
வேறு பெயர்கள்
  • 4-அமினோயிருபீனைலமீன்
  • பாரா-அமினோயிருபீனைலமீன்
  • என்-பீனைல்-பா-பீனைலீன்டையமீன்
  • என்-பீனைல்-1,4-பீனைலீன்டையமீன்
இனங்காட்டிகள்
101-54-2
Beilstein Reference
908935
ChEBI CHEBI:59038
ChEMBL ChEMBL572203
ChemSpider 7283
EC number 202-951-9
Gmelin Reference
241334
InChI
  • InChI=1S/C12H12N2/c13-10-6-8-12(9-7-10)14-11-4-2-1-3-5-11/h1-9,14H,13H2
    Key: ATGUVEKSASEFFO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7564
வே.ந.வி.ப எண் ST3150000
SMILES
  • C1=CC=C(C=C1)NC2=CC=C(C=C2)N
UNII 007X4XXS71
UN number 1673
பண்புகள்
C12H12N2
வாய்ப்பாட்டு எடை 184.24 g·mol−1
தோற்றம் கருப்பு ஊதா–அடர் ஊதா
அடர்த்தி 1.09 கி/மி.லி
உருகுநிலை 75 °C (167 °F; 348 K)
கொதிநிலை 354 °C (669 °F; 627 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H317, H319, H410
P261, P264, P270, P272, P273, P280, P301+312, P302+352, P305+351+338, P321, P330, P333+313, P337+313, P363
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-அமினோயிருபீனைலமீன் (4-Aminodiphenylamine) C12H12N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் இருபீனைலமீனுடன் கூடுதலாக ஒரு அமீன் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். அனிலினின் இந்த இருபடி பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தலை முடி சாயத்திற்கான மூலப்பொருள் என்றாலும் தோல் தொடர்பு மூலம் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.[1] இரப்பர் தொழிலில் பல பொருட்களுக்கான தொடக்க வினை பொருளாக 4-அமினோயிருபீனைலமீன் பயன்படுகிறது.[2] ஒரு மில்லிலிட்டருக்கு 100 நானோகிராம்களுக்குக் குறைவான அளவில் நைட்ரைட்டின் அளவு பகுப்பாய்வுக்கான வண்ண அளவீட்டு சோதனைக்கு, நைட்ரைட்டு வினையூக்கியால் 4-அமினோயிருபீனைலமீன் உடன் N,N-இருமெத்திலனிலீன் ஈடுபடும் இணைப்பு வினை அடிப்படையாகும்.[3]

தொழில்துறை உற்பத்தியின் மிகவும் பொதுவான வழி 4-நைட்ரோகுளோரோபென்சீனுடன் அனிலின் ஈடுபடும் வினையும் அதை தொடர்ந்து உருவாகும் இடைநிலையான 4-நைட்ரோயிருபீனைலமீனைக் குறைத்து தயாரிக்கும் முறையாகும்.[4] நைட்ரோபென்சீனுடன் அனிலீனைச் சேர்த்து அணுக்கரு கவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினைமூலம் ஐதரசனைச் சேர்க்கும் வினை ஒரு மாற்றுத் தயாரிப்பு முறையாகும்.[5] இவ்வினைக்கு மற்றுமொரு குறைப்பு படிநிலை அவசியமாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Khanna, S. K.; Tewari, Pushpa; Joshi, Anil; Singh, G. B. (1987). "Studies on the skin uptake and efflux kinetics of N‐phenyl‐p‐phenylenediamine: an aromatic amine intermediate". International Journal of Cosmetic Science 9 (3): 137–147. doi:10.1111/j.1467-2494.1987.tb00470.x. பப்மெட்:19456976. https://archive.org/details/sim_international-journal-of-cosmetic-science_1987-06_9_3/page/137. 
  2. Engels, Hans-Wilhelm; Weidenhaupt, Herrmann‐Josef; Pieroth, Manfred; Hofmann, Werner; Menting, Karl‐Hans; Mergenhagen, Thomas; Schmoll, Ralf; Uhrlandt, Stefan (2005), "Rubber, 4. Chemicals and Additives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a23_365.pub2
  3. Kadowaki, Ryoichi; Nakano, Shigenori; Kawashima, Takuji (1999). "Sensitive flow injection colorimetry of nitrite by catalytic coupling of N-phenyl-p-phenylenediamine with N,N-dimethylaniline". Talanta 48 (1): 103–107. doi:10.1016/s0039-9140(98)00227-6. பப்மெட்:18967448. 
  4. 4.0 4.1 Bochkarev, V.V.; Soroka, L.S.; Bashkin, J.K. (December 2016). "Resource-efficient technology to produce 4-aminodiphenylamine". Resource-Efficient Technologies 2 (4): 215–224. doi:10.1016/j.reffit.2016.10.011. 
  5. Stern, Michael K.; Hileman, Fredrick D.; Bashkin, James K. (November 1992). "The direct coupling of aniline and nitrobenzene: a new example of nucleophilic aromatic substitution for hydrogen". Journal of the American Chemical Society 114 (23): 9237–9238. doi:10.1021/ja00049a095. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-அமினோயிருபீனைலமீன்&oldid=3780035" இலிருந்து மீள்விக்கப்பட்டது