1729 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 1729 | |
|---|---|
| 1729 | |
| முதலெண் | ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது |
| வரிசையெண் | 1729ஆவது ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பதாவது |
| காரணியாக்கல் | ![]() |
| காரணிகள் | 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 |
| உரோம எண்ணுரு | MDCCXXIX |
| துவித எண் முறைமை | 11011000001 |
| எண்ம எண் முறைமை | 3301 |
| பதினறும எண் முறைமை | 6C1 |
ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது அல்லது இராமானுச எண் அல்லது 1729 (One Thousand Seven Hundred and Twenty-Nine அல்லது Ramanujan Number) என்பது தமிழ் எண்களில் ௧௭௨௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] 1729 என்பது 1728இற்கும் 1730இற்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
ஜி. எச். ஹார்டி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார்.[2] உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.[3]
அவ்விரு வழிகளும் பின்வருமாறு:-
காரணிகள் [தொகு]
1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும்.[5]
இயல்புகள் [தொகு]
- 1729 ஓர் ஒற்றை எண்ணாகும்.
- 1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் ஆகும்.
- 1729 ஒரு கார்மைக்கேல் எண்ணாகும்.[6]

