1,3-புரோப்பேன் சல்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,3-புரோப்பேன் சல்டோன்
1,3-Propane sultone
1,3-புரோப்பேன் சல்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சாதயோலேன் 2,2-டையாக்சைடு
வேறு பெயர்கள்
γ-புரோப்பேன் சல்டோன்; 1,2- ஆக்சோதயோலேன் 2,2-டையாக்சைடு; 3-ஐதராக்சில்-1-புரோப்பேன் சல்போனிக் அமில சல்போன்; 1-புரோப்பேன் சல்போனிக் அமில-3-ஐதராக்சில்-γ-சல்டோன்
இனங்காட்டிகள்
1120-71-4 Y
ChemSpider 13626
InChI
  • InChI=1S/C3H6O3S/c4-7(5)3-1-2-6-7/h1-3H2
    Key: FSSPGSAQUIYDCN-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H6O3S/c4-7(5)3-1-2-6-7/h1-3H2
    Key: FSSPGSAQUIYDCN-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14264
SMILES
  • C1COS(=O)(=O)C1
பண்புகள்
C3H6O3S
வாய்ப்பாட்டு எடை 122.14 g·mol−1
தோற்றம் வெண் படிகத் திண்மம்; நிறமற்ற நீர்மம் 31 °செ மேல்
அடர்த்தி 1.392 கி/செ.மீ3 40 °செ இல்
உருகுநிலை 31 °C (88 °F; 304 K)
கொதிநிலை 112 °C (234 °F; 385 K) 1.4 மிமீ பாதரசத்தில்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

1,3-புரோப்பேன் சல்டோன் (1,3-Propane sultone) என்பது (CH2)3SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கந்தகக் கரிமச் சேர்மமான இது ஒரு சைக்ளிக் சல்போனேட்டு எசுத்தர் ஆகும். வளைய சல்போனேட்டு எசுத்தர்கள் பொதுவாக சல்டோன்கள் எனப்படுகின்றன[1][2]. நிறமற்ற திண்மமான இச்சல்டோன் விரைவாக உருகுகிறது.

தயாரிப்பு[தொகு]

அல்லைல் ஆல்ககாலையும் சோடியம் பைசல்பைட்டையும் சேர்த்து அமில வினையூக்க வினைக்கு உட்படுத்தினால் 1,3-புரோப்பேன் சல்டோன் தயாரிக்கலாம்.

வினைகள்[தொகு]

1,3-புரோப்பேன் சல்டோன் அணுக்கரு தாக்கத்தை ஏற்கின்ற ஒரு கிளர்வூட்டப்பட்ட எசுத்தர் ஆகும். நீராற்பகுப்பு அடைந்து ஐதராக்சிசல்போனிக் அமிலமாக மாறுகிறது.

Hydrolysis of Propane-1,3-sultone

சிறப்புவகை புறப்பரப்பு செயலிகள் தயாரிப்பில் 1,3-புரோப்பேன் சல்டோன் பயன்படுத்தப்படுகிறது[3].

முன்பாதுகாப்பு[தொகு]

கிளர்வூட்டப்பட்ட எசுத்தர்களில் குறிப்பாக 1,3-புரோப்பேன் சல்டோன் ஒரு ஆல்க்கைலேற்றும் முகவராகச் செயல்படுகிறது. நச்சுத்தன்மை, புற்றுநோயூக்கி, சடுதிமாற்றி, கருக்குலைப்புத் தன்மை முதலிய அபாயங்களைக் கொண்டுள்ளது[4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. R. J. Cremlyn (1996). An Introduction to Organosulfur Chemistry. Chichester: John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 471 95512 4.
  2. "Chem. Commun. article". 
  3. Hjelmeland, LM (November 1980). "A nondenaturing zwitterionic detergent for membrane biochemistry: design and synthesis.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 77 (11): 6368–70. doi:10.1073/pnas.77.11.6368. பப்மெட்:6935651. 
  4. "Scorecard Chemical Profile for Propane Sultone". Archived from the original on 2008-09-23. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.
  5. "NIOSH Pocket Guide to Chemical Hazards". பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-புரோப்பேன்_சல்டோன்&oldid=3539992" இலிருந்து மீள்விக்கப்பட்டது