வெடிமருந்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதன்முதலில் சீன மொழியில் எழுதப்பட்ட வெடிமருந்தின் சூத்திரம். நூல் உஜிங் சோங்யாவோ. ஆண்டு கி. பி. 1044.

வெடிமருந்து என்பது முதன்முதலில் உருவாக்கப்பட்ட வெடிக்கும் பொருள் ஆகும். இது சீனாவின் நான்கு பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றென பொதுவாக பட்டியலிடப்படுகிறது. இது தாங் அரச மரபின் ஆட்சிக்காலத்தின் பின்பாதியில் உருவாக்கப்பட்டது. ஆனால் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட வெடிமருந்தின் சூத்திரமானது சாங் அரச மரபின் ஆட்சிக் காலத்தின் போது தோன்றுகிறது. வெடிமருந்தை பற்றிய தகவல்களானது ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பதிமூன்றாம் நூற்றாண்டில் நடந்த மங்கோலிய படையெடுப்புகள் என்று கருதப்படுகிறது. 1267 ஆம் ஆண்டு ரோஜர் பேகன் எழுதிய ஒபுஸ் மஜுஸ் கட்டுரை மற்றும் 1280ஆம் ஆண்டு காசன் அல்-ரம்மா எழுதிய கட்டுரை ஆகியவற்றில் வெடிமருந்துக்கான எழுதப்பட்ட சூத்திரங்கள் காணப்படுகின்றன. போர்க்களங்களில் வெடிமருந்து சிறிதளவேனும் குறைந்தது பத்தாம் நூற்றாண்டிலாவது நெருப்பு அம்புகள், வெடிகுண்டுகள் மற்றும் நெருப்பு வாள்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  • Adle, Chahryar (2003), History of Civilizations of Central Asia: Development in Contrast: from the Sixteenth to the Mid-Nineteenth Century
  • Ágoston, Gábor (2005), Guns for the Sultan: Military Power and the Weapons Industry in the Ottoman Empire, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-60391-1
  • Agrawal, Jai Prakash (2010), High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics, Wiley-VCH
  • Andrade, Tonio (2016), The Gunpowder Age: China, Military Innovation, and the Rise of the West in World History, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13597-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிமருந்தின்_வரலாறு&oldid=3149604" இலிருந்து மீள்விக்கப்பட்டது