வி. பி. நந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி.பி. நந்தகுமார்
V. P. Nandakumar
பிறப்புவாலாபாத்து, திருச்சூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிவணிகம்
பணியகம்மணப்புரம் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

வி. பி. நந்தகுமார் [1] (V. P. Nandakumar) இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வாலாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார். இவர் மணப்புரம் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணிபுரிகிறார். [2][3][4][5]

ஆசிர்வாத் சிறுநிதி நிறுவனத்தின் தலைவராகவும் நந்தகுமார் உள்ளார். இந்நிறுவனம் இந்தியாவின் 4 வது பெரிய சிறுநிதி குழுமமாகும். இந்நிறுவனத்தின் மூலதன மதிப்பு 5,000 கோடி ரூபாயாகும். இந்தியா முழுவதும் 2,600 கிளைகள் உள்ளன, 26,000 பேர் வேலை செய்கிறார்கள். நிறுவனத்தின் வருவாய் ரூ 2,200 கோடியாகும் சொத்துக்கள் சுமார் 11,000 கோடியாகும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நந்தகுமாரின் தாயார் ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தார். முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் நந்தகுமார் தனியார் வங்கியான கோழிக்கோடிலுள்ள நெடுங்காடி வங்கியில் நன்னடத்தை அலுவலராகப் பணிபுரிந்தார். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கிப் பணியிலிருந்து 1986 ஆம் ஆண்டு விலகி குடும்பத் தொழிலுக்குத் திரும்பினார். வங்கியில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு குடும்ப அடகுத் தொழிலை விரிவுபடுத்தினார். கேரள வங்கிகள் கணினி மயமாக்கப்படுவதற்கு முன்பே இவர் தனது நிறுவனத்தை கணினி மயமாக்கினார். ஆறே ஆண்டுகளில் இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஏழு கோடியாக உயர்ந்தது. பின்னர் படிப்படியாக நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. [6]

தனித்தன்மை[தொகு]

வி.பி. நந்தகுமார் பன்னாட்டு அரிமா சங்கத்தின் பன்னாட்டு இயக்குநராகவும் உள்ளார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sinha, Shiply (27 February 2019). "Dealing with NBFC risks: Loosen the bank strings". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  2. "We have not made any mistakes knowingly: V P Nandakumar". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  3. "V.P. Nandakumar re-appointed Manappuram Finance MD & CEO". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  4. "There's gold in the gold loans business for Manappuram". FirstPost. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  5. "VP Nandakumar: Man with the Midas touch". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  6. Asokan, Mamtha (2 January 2020). "Asirvad Microfinance crosses Rs 5,000 crore in AUM". The Times of India. https://timesofindia.indiatimes.com/business/india-business/asirvad-microfinance-crosses-rs-5000-crore-in-aum/articleshow/73069861.cms. பார்த்த நாள்: 10 January 2020. 
  7. Bureau, BW Online (3 October 2019). "Lions Club Inaugurates World's First Club For Transgenders". Business World. http://www.businessworld.in/article/Lions-Club-Inaugurates-World-s-First-Club-For-Transgenders/03-10-2019-177084/. பார்த்த நாள்: 10 October 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._நந்தகுமார்&oldid=3165402" இலிருந்து மீள்விக்கப்பட்டது